அரசின் சேவை உரிமை சட்டம் பற்றி மக்க்ள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரபரப்பு கருத்து கூறியுள்ளார்.
அரசின் சேவைகள் உரிய காலத்திற்குள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’தமிழகத்தில் அமல்படுத்தப்படவேண்டுமென்பதை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இச்சட்டத்தின் கீழ் சுமார் 150 சேவைகளை உரிய காலத்திற்குள் பெறமுடியும்.உதாரணமாக,ஹரியானாவில் 15 நாட்களில் ரேஷன் கார்டு,8நாட்களில் மின் இணைப்பு,7 நாட்களில் ஜாதிச் சான்று,12 நாட்களில் குடிநீர் இணைப்பு என கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி இந்தச் சேவைகள் தாமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்து மனுதாரருக்கு நஷ்ட ஈடாக வழங்குவதையும் இச்சட்டம் உறுதி செய்கிறது. தேவையற்ற காத்திருப்பு, இலஞ்சம் ஆகியவற்றை ஒழிக்க இச்சட்டம் உதவும்.
இவ்வாறு கமல் ஹாசன் கூறியுள்ளார்.