Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஸ்கார் வென்ற ராஜமவுலிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருதில் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. அதற்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:

இந்திய திரையுலகம் இன்று திருவிழா கொண்டாட்டிக் கொண்டிருக்கிறது!
உலக அரங்கில் இந்தியச் சினிமாவை கொண்டு சேர்த்து, இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று பெருமை சேர்த்திருக் கிறது.

“கார்த்திகி கன்சால்வ்ஸ்” இயக்குனர் தலைமையில் உருவான
“The Elephant Whisperers” சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. இது பல இளம் படைப்பாளிகளை ஊக்கமடைய செய்திருக்கிறது.

ராஜமௌலி இயக்கிய #RRR படத்தில், கீரவாணி இசைய மைப்பில், சந்திரபோசின் பாடல் வரிகளில் அமைந்த
“நாட்டு நாட்டு” பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதுதினை பெற்று திரையுலகையே நடனமாட வைத்திருக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற இரு உன்னத படைப்புகளை படைத்திட்ட படைப்பாளிகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய வாழ்த்தினையும், பாராட்டையும் தெரிவித்து பெருமைகொள்கிறது.
நன்றி!

இவ்வாறு எம்.நாசர் கூறியுள்ளார்.

Related posts

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை: நடிகர் அபிஷேக் பேச்சு!

Jai Chandran

1000 வருடத்திற்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் படமாகிறது

Jai Chandran

K E Gnavelraja Gifted a MG Hector Car To Director Shakti Rajan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend