Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வசந்தமுல்லை (பட விமர்சனம்)

படம்: வசந்தமுல்லை

நடிப்பு: சிம்ஹா, கஸ்மீரா பர்தேசி, ஆர்யா, சரத்பாபு, கொச்சு பிரேமன், ரமாபிரபா, தீபக் பிரமேஸ், மோகன், கிரீஸ் நாயர், மோனா

தயாரிப்பு: ரஜனி தல்லூரி ரேஷ்மி சிம்ஹா

இசை: ராஜேஷ் முருகேசன்

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

இயக்கம்:: ரமணன் புருஷோத்தமா

பி ஆர் ஒ : யுவராஜ்

ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சிம்ஹா குறுகிய காலத்தில் பெரிய புராஜெக்ட் முடித்து தருவதாக ஒப்புக்கொண்டு சாப்பாடு, தூக்கம் இல்லாமல் இரவு பகலாக உழைக்கிறார். மனைவி யையும் கவனிக்க முடியாமல் போகிறது. மனஉளைச்சலுக்கு உள்ளாகும் சிம்ஹா மயங்கி விழுகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் சிம்ஹாவுக்கு முழுமை யான ஓய்வு தேவை என்கிறார். இதையடுத்து மலைப்பிரதேசத் துக்கு மனைவி கஸ்மீராவுடன் காரில் புறப்படுகிறார். வழியில் சிறுவிபத்து ஏற்பட இரவு பயணத்தை ரத்து செய்து ஒரு லாட்ஜில் தங்கச் செல்கின்றனர். பழங்கால லாட்ஜில் இருவரும் தங்கும் நிலையில் எதிர்பாராத வில்லன் கஸ்மீராவை கொல்ல முயல்கிறான். அவனிடமிருந்து கஸ்மீராவை காப்பாற்ற முடியாமல் தோற்கும் சிம்ஹா,  ஜன்னல் வழியே பார்க்கும்போது மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்குள்ள காரிலிருந்து  மற்றொரு சிம்ஹாவும் கஸ்மீராவும் இறங்கி லாட்ஜிக்குள் வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியாக அமைய அடுத்து என்ன நடக்கிறது என்பதற்கு த்ரில்லுடன் கிளை மாக்ஸ் பதில் சொல் கிறது.

ஐடி நிறுவன கதைபோல் தொடங்கி டைம் லூப் கதைக்குள் பயணித்து மர்ம மனிதன் தாக்குதல் என ஊடுருவி சைன்ஸ் ஃபிக்சன் கதையாக முடிகிறது வசந்த முல்லை.

சிம்ஹா சோலோ ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வேடத்தை உணர்ந்து அதற்கேற்ப டென்ஷன், கோபம், ஆத்திரம், பயம் என பலவிதபாவங்களை காட்டி நடிப்பில் முழுமையாக ஸ்கோர் செய்கிறார்.

கஸ்மீராவுடன் சிம்ஹா இரவில் காட்டுப் பகுதி யில் காரில் பயணிக்கும் போதே ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று உணரமுடிகிறது. அதுவும் வசந்த முல்லை லாட்ஜிக்குள் அவர்கள் நுழைந்ததும் அது ஒரு பேய் மாளிகைபோல தோற்றம் அளிப்பது விபரீதம் நடக்கப்போ வதை உறுதி செய்கிறது.

ஆள் நடமாட்டமில்லாத லாட்ஜில் தனி. அறையில் தங்கும் சிம்ஹா, காஸ்மீரா ரொமான்ஸ் செய்ய தயாராகும்போது திடீரென்று அடிக்கும் ஜன்னல் கதவு சத்தம் அலறலை கிளப்பி விடுகிறது.

கஸ்மீரா மூச்சு திணறல் ஏற்பட்டு தவிக்க அதைக்கண்டு பதறும் சிம்ஹா இன்ஹெலர் வாங்கி வர வேகமாக காரில் பறந்துவிட்டு திரும்பியதும் மர்ம மனிதன் தாக்குதலில் சிக்கி உயிருக்கு போராடி அவனுடன் சிம்ஹா மோதுவது எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற பயத்தை ஏற்படுத்து கிறது.

வில்லுடன் தாக்கும் அந்த மர்ம முகமூடி மனிதன் யார் என்பது சஸ்பென்சாக காட்டப்படுவதால் அதை இங்கு உடைத்தால் சுவாரஸ்யம் போய்விடும்.
கெஸ்ட் ரோலில் ஆர்யா, சரத்பாபு நடித்திருக்கின்றனர். லாட்ஜ் மேனஜராக வரும் கெச்சு பிரேமன் பயம், கோபம் காட்டி நடிப்பில் கவர்கிறார்.

ரஜனி தல்லூரி ரேஷ்மி சிம்ஹா தயாரித்திருக்கின்றனர்

ராஜேஷ் முருகேசன் இசை காட்சிகளுக்கு உயிர்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு ஜில்லிட வைக்கிறது.

ரமணன் புருஷோத்தமா இயக்கும் புதுமுயற்சி என்றாலும் மூன்று நான்கு ஜனர்களை ஒரே கதையில் திணித்திருப் பது குழப்பத்தில் ஆழ்த்துகிறது. கிளைமாக்ஸில் எப்படி தீர்வு சொல்வது என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. குழப்பம் ஒரு பக்கமிருந்தாலும் திரில்லுக்கு பஞ்சம் வைக்கவில்லை.

வசந்தமுல்லை – ரோஜா முள்.

Related posts

Actor Mahendran joins the cast of action thriller

Jai Chandran

விக்ரம் (பட விமர்சனம்)

Jai Chandran

“நாகபந்தம்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend