படம்: கொடை
நடிப்பு: கார்த்திக் சிங்கா, ரோபோ சங்கர், அனாயா, எம்.எஸ் பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, போஸ் வெங்கட், அஜய் ரத்னம், சுவாமி நாதன், ஞான சம்பந்தன், நளினி, கே ஆர் விஜயா
தயாரிப்பு: எஸ் எஸ் பிக்சர்ஸ்
இசை: சுபாஷ் கவி
ஒளிப்பதிவு: அர்ஜூனன் கார்த்திக்
இயக்கம்: ராஜசெல்வம்
பி ஆர் ஒ: சதீஷ், சிவா (AIM)
கொடைக்கானல் விடுதியில் வேலை செய்யும் கார்த்திக் சிங்கா தீ அணைப்பு துறையில் பணியாற்றும் அனாயா மீது காதல் கொள்கிறார். அவரிடம் எப்படியாவது காதலை சொல்ல எண்ணுகிறார் கார்த்திக். ஆனால் அவரிடம் காதலை சொல்பவர்கள் மறுநாள் வந்து தங்கச்சி என்று அவரை அழைப்பதை பார்த்து கார்த்திக் தயங்குகிறார். இந்நிலை யில் கார்த்திக் அந்த ஊரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தை பராமரிக்கிறார். இந்த விஷயத்தை யறிந்து அனாயாவே அவர் மீது காதல் கொள்கிறார். இந்நிலை யில் குழந்தைகள் காப்பகத்துக்கு வரவேண்டிய ரூ 25 லட்சம் பணத்தை ஒரு தாதா ஏமாற்ற அந்த பணத்தை தந்திரமாக கார்த்திக் எப்படி கைப்பற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்.
கொடைக்கானலில் நடக்கும் கதையாக களம் அமைக்கப்பட்டி ருக்கிறது. ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் பொழுது போக்காக ஒரு படத்தை தர வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த படமாகவே கொடை உருவாகியிருக்கிறது.
ஹீரோ கார்த்திக் சிங்கா நடனம், ஆக்ஷன் என எல்லாவற்றையும் முறைப்படி கற்றுக் கொண்டிருப் பது நடிப்பில் வெளிப்படுகிறது. எதார்த்தமான வாலிபராக நடித்தி ருக்கும் கார்த்திக் சிங்கா தனது திறமையை வெளிப்படுதியிருக் கிறார். எதிர்காலத்தில் இன்னும் திறமை காட்ட வேண்டிய வாய்ப்பு களில் அதனை நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம். பல காட்சிகளில் இயல்பாக இல்லாமல் விரைப்பாக இருப்பதுபோல் பாடிலேங்க்குவேஜ் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியம்.
மீன்கள் பறக்கும் குளத்தில் கார்த்திக் சின்கா அடியாட்களுடன் மோதும் ஆக்ஷன் காட்சி அசத்தல்.
ஹீரோவின் நண்பராக வரும் ரோபோ சங்கர் தனது பாத்திரத் தில் இன்னும் ஈடுபாடு காட்டி நடித்திருக்கலாம். ஆங்காங்கே சில டபுள் மீனிங் வசனங்கள் பேசி நெருட வைக்கிறார். பெண் வேடம் போடும் சங்கர் அதற்கு ஏற்ப மேக்கப் அணிந்தாலும் தாடி மீசையுடன் இருப்பது ஓவர். ஏன் இந்த ஏனோதானோ நடிப்பு என்பது புரியவில்லை.
அனாயா இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்.
சிங்கமுத்து அனுபவ நடிப்பால் தனது சிரிப்பலையை வசனங் களை தவழ விட்டு கலகலபாக்கி றார்.
எம் எஸ் பாஸ்கர் இஸ்திரி வண்டிக் காராக வருகிறார். பழைய வில்லன் அஜய் ரத்னம் பயமுறுத் துகிறார்.
மேலும் மாரிமுத்து, போஸ் வெங்கட், ஆனந்த் பாபு, ஞானசம்பந்தன், சிசர் மனோகர், கே ஆர் விஜயா, நளினி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக் கின்றனர்.
படத்தை எஸ் எஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.
சுபாஷ் கவி இசையில் பாடல்கள் கேட்கும்படியும் ரசிக்கும்படியும் உள்ளது.
ஒளிப்பதிவாளர் அர்ஜூனன் கார்த்திக் கொடைக்கானலை இன்னும் எழிலாகவும் அழகாகவும் காட்டி அசத்தியிருக்கலாம்.
ராஜசெல்வம் தெளிவான நேர்க்கோட்டில் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
கோடை – பொழுதுபோகும்.

mmm
