Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வர்ணாஸ்ரமம் ( பட விமர்சனம்)

படம்: வர்ணாஸ்ரமம்?

நடிப்பு: சிந்தியா லெளர் டே ,ராமகிருஷ்ணன், பிக்பாஸ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானு வேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஸ்வரி, ஏ.பி.ரத்ன வேல்

தயாரிப்பு: சிந்தியா லெளர் டே

இசை: தீபன் சக்ரவர்த்தி

ஒளிப்பதிவு: பிரவீனா எஸ்.

இயக்கம்: சுகுமார் அழகர்சாமி

பி ஆர் ஒ: விஜயமுரளி

இப்படத்தின் தயாரிப்பாளர் சிந்தியா லெளர் அமெரிக்காவிலி ருந்து தமிழ் படம் எடுக்க வந்திருக் கிறார். முதல் தயாரிப்பே ஜாதி பாகுபாடு பார்த்து நடக்கும் ஆணவ கொலை படமாக தயாரிக்கிறார். அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய குடும்பத்தில் நடந்த ஆணவ பாகுபாடுவை நேரில் பார்த்ததன் பாதிப்பே இதுபோன்ற கதையை தயாரிக்க முடிவு செய்த தாக அவர் கூறினார்.
மறைந்த இயக்குனர் கே பாலச் சந்தரின் உதவி டைரக்டராக பணியாற்றிய சுகுமார் அழகர்சாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு கிராமத்து பக்கம் நடக்கும் சில ஆணவ படுகொலை கள் . பற்றிய டாக்குமென்ட்ரி தயாரிக்க வருகிறார் சிந்தியா. அவர்களை காரிலும் ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார். ராமகிருஷ்ணன். ஜாதி மாறி காதலிக்கும் சிலஜோடிகள் அவ்வூர் ஜாதி சங்கத்தினர் மூலம் வரும் எதிர்ப்பால் உயிர்கள் கொலை செய்யப்படுவது, தீயில் எரிக்கப் படுவது என கொல்லப்படுகின் றனர். அதில் தப்பி வரும் ஜோடியை காப்பாற்றுகிறார் சிந்தியா. அவர்களை தேடிப் பிடித்து ஜாதிக்காரர்கள் சுற்றிவளைக்கின்றனர். அவர்களிடம் சமாதானம் பேசி ஜோடிகளை அனுப்பி வைக்கி றார்.சிந்தியா. அதற்கு சம்மதித்து ஜோடிகளை சாதிக் காரர்கள் அழைத்துச் செல்கின்றனர். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு பரபரப்பான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

தன் மகளை காதலித்தவனை ரவுடிகளை ஏவி  கொல்லும் ஒரு தந்தை அவர்களை பழிவாங்கும் மகள், கீழ்சாதி வாலிபனை காதலிக்கும் மேல்சாதிப் பெண்ணை அந்த ஊர் அடாவடி  பேர்விழி  பலாத்காரம் செய்வது என காட்சிகள் அனல் பறக்க செல்கிறது.

ஊர் ஜனத்துக்கு பயந்து தங்கைக்கு திருமணம் செய்ய ஐடியா கொடுக்கும் அண்ணனை மீறி சாதி சங்க தலைவன் அப்பெண்ணின் மார்பகத்தை அறுத்து கொல்லு ம் கொடூரம் திகிலை ஏற்படுத்துகிறது.

படத்தில் நடித்திருக்கும் சிந்தியா லெளர் டே , ஹீரோ ராமகிருஷ் ணன், பிக்பாஸ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானு வேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஸ்வரி, ஏ.பி.ரத்ன வேல் என பல  புதுமுகங்கள். இதில் சிலர் எதார்த்த நடிப்பில் மனதில் இடம் பிடிக்கின்றனர் . குறிப்பாக ஐய்யர் வேடத்தில் நடித்திருக்கும் கவிதாலயா மோகன் தனது கணீர் குரலால் தங்களது ஆசாரங் களுக்கு முரணாக நடக்கும் தங்கை மகளை கண்டிப்ப தும் புலம்புவது மாக கடுப்பேற்றும் படி நடித்து வேடத்தை நிறைவு செய்கிறார்.

வெவ்வேறு ஜோடிகளின் கதை என்பதாலும் பெரும்பாலும்  புதுமுகம் என்பதாலும் யார் யார்  எந்த ஜோடி என்பதை அறிவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏதாவது ஒன்றில் ஒரு பிரபல ஜோடியை நடிக்க வைத்திருந்தால் படத்துக்கு பிளஸ்ஸாகி இருக்கும்.
கிளைமாக்சிலும் ஆணவ கொலையாக முடிப்பதற்கு பதில் துணிச்சலான ஒரு தீர்வை சொல்லியிருந்தால் வழக்கமான இயக்குனர்களிருந்து இப்பட இயக்குனர் மாறுபட்டிருப்பார்.

தீபன் சக்ரவர்த்தி இசையில் பறை மேள சத்தம் ஒரு காட்டு காட்டு கிறது.

பிரவீனா எஸ் ஒளிப்பதிவு ஒ கே ரகம். எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

வர்ணாஸ்ரமம் – காலத்தின் கண்ணாடி.

 

Related posts

வஞ்சம் தீர்த்தாயடா படத்துக்கு வருங்கால சூப்பர் ஸ்டாரை தேடும் சுசிகணேசன்

Jai Chandran

Raghava Lawrence begs apologise from college student

Jai Chandran

பட அதிபர் ஏவிஎம் சரவணன் காலமானார்: திரை உலகம் இறுதி அஞ்சலி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend