Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

: மெய்பட செய் (பட விமர்சனம்)

படம்: மெய்பட செய்

நடிப்பு: ஆதவ் பாலாஜி, ராஜ்கபூர், பி ஆர் தமிழ்செல்வன், மதுநிகா, பெஞ்சமின்,  சூப்பர் குட் சுப்ரமணி, ஆடுகளம் ஜெயபால், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா

தயாரிப்பு: பி ஆர் தமிழ்செல்வன்,

இசை: பரணி

ஒளிப்பதிவு: தீனா

இயக்கம்: வேலன்

பு. ஆர் ஒ: சுரேஷ்சுகு, தர்மதுரை

கீழ் வகுப்பை சேர்ந்த முத்துப் பாண்டி (ஆதவ் பாலாஜி) வேறு ஜாதி பெண்ணை காதலிக் கிறான். அதற்கு ஊரில் எதிர்ப்பு கிளம்பு கிறது. எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு ஊரிலிருந்து நண்பர்களுடன் சென்னை வந்து விடுகின்றனர். வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இடத்தில் வீட்டின் பின்புறம் ஒரு பெண் புதைக்கப் பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் தருகின்றனர். ரவுடி கட்ட கஜா (ஆடு களம் ஜெயபால்) கூட்டம் இளம் பெண்ணை சீரழித்து கொன்றது தெரியவருகிறது போலீஸ் ரவுடிகளை பிடித்து ஜெயிலில் போடுகிறது. இதை யடுத்து முத்துப்பாண்டியும்ம் நண்பர்களும் ஊர் திரும்புகின் றனர். ஆனால் அந்த ரவுடிகள் விடுதலையாகிவிடும் தகவல் தெரிந்ததும் முத்துப்பண்டியும் நண்பர்களும் ரவுடிகளுக்கு தாங்களே தண்டனை வழங்க முடிவு செய்கின்றனர். அவர்கள் தண்டனை வழங்கினார்களா என்பது கிளைமாக்ஸ்

முத்துப்பாண்டியாக
நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி தேர்ந்த நடிகர் போல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நடனம், சண்டை காட்சிகளிலும் சோடை போகவில்லை.
பெண்ணை சீரழிப்பவன் எப்படியா வது வெளியே வந்துவிடுகிறான் அவனுக்கு கொடுக்கும்  தண்டனை தப்பு செய்ய எண்ணும் மற்றவர் களுக்கும் பயத்தை வரவழைக்க வேண்டும் இல்லாவிட் டால் அந்த தண்டனை பயன்படாது அதேபோல் தப்பு செய்பவர்களுக்கு பாதிக்கப் பட்ட பெண்ணின் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களே  தண்டனை தரும் அதிகாரம் தர வேண்டும் என நாயகன் பேசும் வசனங்களில் அர்த்தம் உண்டு.
ஆனால் எந்த வேலையும் செய்யாமல் வீட்டுக்கு பாரமாக இருப்பதாக தந்தையே புலம்பும் அளவுக்கு ஊர் சுற்றி திரியும் ஹீரோ ஆதவ் பாலாஜி மற்றவர் களுக்கு அட்வைஸ் செய்வது ஏற்கும்படி இல்லை.
ஒரு சாயலில் ஆதவ் பாலாஜி மலையாள நடிகர் மோகன்லால் போல் தெரிகிறார் . படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து விட்டால் ஜூனியர் மோகன்லால் என்று பெயர் பெறுவார்.

ஹீரோயின் மதுநிகா வேடத்துக்கு பொருந்துகிறார். ஆனால் காதல னுடன் தனிமையில் அமர்ந்து கிச்சு தாம் பாளம் விளையாடுவது காதில் பூசுற்றல்.

ராஜ்கபூர் தன் மகளை கண்டிக் கவும் முடியாமல் தண்டிக்கவும் முடியாமல் தயங்குவதும் ஒரு கட்டத்தில் ஜாதி மாறி திருமணத் துக்கு சம்மதம் தெரிவித்து சமாதானக் கொடி தூக்குவதும் நல்ல தீர்வு.

தயாரிப்பாளர் பிஆர்.தமிழ் செல்வன் மதுநிகாவின் தாய்மாமனாக வந்து நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுவதும் கடைசியில் பம்மி பெட்டிப் பாம்பாவதும் தமாசு.

சூப்பர் குட் சுப்ரமணியம் தந்தையாக எதார்த்த நடிப்பில் கவர்கிறார்.
இன்ஸ்பெக்டர் ஓ ஏ கே சுந்தர் நல்ல போலீசாக வருகிறார்.

ஜாதி பிரச்சனை கதை வழக்கம் போல் ஆணவ கொலை கதையாக மாறிவிடுமோ என்று எண்ண வைத்து பிறகு திசை திருப்பி ஆக்ஷன் கதையாக மாற்றித்
யிருககும் இயக்குனர் வேலன் எதிர்பாராத திருப்பம் தந்திருக் கிறார்.

பரணி இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. தீனா ஒளிப்பதிவு தெளிவு.

மெய்பட செய் – சட்டத்துக்கு சவால்.

Related posts

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஹைகூ போட்டி முடிவு: 2ம் தேதி பரிசளிப்பு

Jai Chandran

அதிரடி வசனங்களுடன் ஜெயம் ரவியின் ‘பூமி’ பட டிரெய்லர் ரிலீஸ்

Jai Chandran

ஒன்றிணைவோம் வென்றிடுவோம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend