Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமைச்சர் உதயநிதிக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் வாழ்த்து

 

தமிழக. அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டஔதயநிதி ழ ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி பொன்னாடை அணிவித்து வாழ்த்து  தெரிவித் தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராம சாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” சேப்பாக்கம் திருவல்லிக் கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , திரைப்பட கதாநாய கனும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக அமைச்சராக பதவி ஏற்க உள்ளது தமிழ் திரை உலகத்திற்கே பெருமை என்று சொல்லலாம். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் திரை உலகினரிடம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இளம் வயதிலேயே திரைத் துறையில் தனது வசனத்தால் புரட்சியை ஏற்படுத்தியவர். படங்களயும் தயாரித்தவர். சட்ட மன்ற உறுப்பினராக தேர்வாகி, மந்திரியாகி, ஐந்துமுறை முதல்வ ராக ஆட்சிக் கட்டிலில் மட்டுமல்ல, மக்கள் மனதிலும் இன்றுவரை நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்.

அதேபோல் உதயநிதி ஸ்டாலினும், திரைத் துறையில் ஆளுமையுடன் கூடிய மய்யமாக வலம் வந்து, கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்று , சந்தித்த முதல் தேர்தலி லேயே வெற்றிபெற்று சட்ட சபையில் நுழைந்து அசத்தி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அய்யா கலைஞர் ஆசியுடனும் , தந்தை தளபதி வழிகாட்டுதலிலும் , மந்திரி பதவியில் சிறப்பாக பணியாற்றி மக்கள் நம்பிக்கை யை பெறுவார் என்பது நிச்சயம். உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் திரைஉலகம் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

TFPC

Related posts

தீ இவன் படத்திற்கு 4 சண்டை காட்சியில் கார்த்திக்

Jai Chandran

Annaatthe Censored UA

Jai Chandran

ஹரிஷ் நடிக்கும் “தாஷமக்கான்” டைட்டில் வெளியீடு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend