Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதுமுகங்களின் அணிவகுப்பில் ” மந்த மாருதம்”

புவனேஷ்வரி மூவீஸ் நிறுவனம் சார்பில் எம்.முருகனும், பவி கிரியேஷன்ஸ் படக் கம்பெனி சார்பில் சதா முருகனும் இணைந்து தயாரிக்கும் படத்தின் பெயர் தான் ” மந்த மாருதம்”.

இதில் புதுமுகங்கள் ஆதவா, தினேஷ் , ஜீவா, மனிஷா, சிவானந்தினி, நபா, தேவா, ஹேமலதா, யாழினி, ரேவதி, தேவேந்திரன், ஆகியோர் நடிக்கின்றனர்.

சந்திரன் சாமி – – மிதுன் கார்த்தி இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ஜேக்கப் சாமுவேல் இசையமைக்க, ஆதிஷ் உத்ரியன் பின்னணி இசையமைக் கிறார்.

சென்னை, ஏற்காடு, கொடைக் கானலில் வளர்ந்துள்ள இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் திபெத் நாட்டில் படமாக்கப்பட் டுள்ளது.

” மந்த மாருதம்” திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதியவரான ஆர்.இளமாறன் படத்தின் கதை யை பற்றி கூறியதாவது, ”
ஓட்டப்பந்தய வீராங்கனையான கதாநாயகி மக்களுக்கு தேவை யான ஒன்றை கண்டுபிடிக்கிறாள்.
அந்த கண்டுபிடிப்பால் கதாநாய கிக்கு பேரும் புகழும் கிடைத்து விடும் என்று நினைக்கும் ஒரு கும்பல் அந்த அரிய கண்டு பிடிப்பை மக்களுக்கு சேரவிடா மலும், கதாநாயகிக்கு பாராட்டு கிடைக்கக்கூடாது என்பதற்காக வும் நாசவேலையில் ஈடுபடுகிறது. அந்த நாசவேலையை தடுத்து கதாநாயகி வென்றாரா? நாசவேலையில் ஈடுபட்ட கும்பல் போலீசிடம் சிக்கினார்களா?
என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் ஆக்சன் திரில்லராக சொல்லி இருக்கி றேன்” என்று கூறுகிறார்.

நித்திஷ் ஸ்ரீராம்
பி.ஆர்.ஓ.

Related posts

Dulquer Salmaan on the cover of Top Gear India

Jai Chandran

ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற ஆலோசனைக்குழு: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

Jai Chandran

செல்ஃபி வெற்றிவிழாவில் இயக்குனருக்கு புதுபட வாய்ப்பு தந்த தாணு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend