படம்’ விட்னஸ்
நடிப்பு: ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முக ராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம்
தயாரிப்பு: டி.ஜி.விஸ்வபிரசாத்
இசை:ரமேஷ்
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – தீபக்
பி ஆர் ஒ: குணா
ரிலீஸ்: சோனி ஒடி டி தளம்
துப்புறவு வேலை செய்யும் ரோகிணியின் மகன் திடீரென்று இறந்துவிட்டதாக தகவல் வருகிறது.அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது இறந்துவிட்டதாக கூறப்படுவதை ஏற்க மறுக்கிறார் ரோகிணி. தன் மகன் கல்லூரியில் படிக்கிறான் இதுபோன்ற தொழி லில் அவன் ஈடுபடுவதில்லை என்று சொல்வதுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். அவருக்கு கம்யூனிஸ்ட் தோழர் உதவுகிறார். அவரது அட்வைஸ்படி நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட போலீஸ் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. அதில் ரோகிணியின் மகனை கழிவு நீர் தொட்டியில் இறக்கிய கான்ட்டிராக்டர் முதல் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிவரை சிக்குகின்றனர். இறுதியில் ரோகிணிக்கு நியாயம் கிடைக் கிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
சமுதாய கருத்துள்ள படங்கள் எப்போதோ ஒருமுறைதான் வருகிறது அந்த வரிசையில் அப்பாவி ஒருவரின் உயிருக்காக நியாயம் கேட்டிருக்கிறது இப்படம்.
துப்புறவு தொழிலாளியாக வரும் ரோகிணி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார். மகன் இறந்த தகவல் அறிந்ததும் ரோகிணி பதறுவதும் தன மகன் கழிவுநீர் தொட்டியில் இறங்கியிருக்க மாட்டான் என போலீசிடம் மல்லுக்கு நிற்பதும் எதார்த்தம்.
மகன் சாவுக்கு நீதி கேட்டு கோர்ட்டில் துணிச்சலாக வழக்கு தொடர ரோகிணி முடிவு செய்வது அழுத்தமான காட்சி. கோர்ட்டில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படுவது ஒரு நிஜ வழக்கை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மனித கழிவை மனிதனே அள்ளுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்ற வாதம் அழுத்தமாக பதிவு செய்யப் படுவதும் ஆனாலும் அந்த விதிகளை பின்பற்றாததற்கு சாதிதான் காரணம் என்ற உண்மை போட்டுடைக்கப்படுவது வெளிப் படையாக நடக்கும் இன்றைய சாகி அரசியலுக்கு தரப்படும் சவுக்கடி.
வழக்கு முடிந்து தீர்ப்பு வரும் நிலையில் ஜட்ஜ் மாறிவிடுவார் என்று உள்ளுணர்வு சொல்வது போலவே காட்சி வருவது கிளைமாக்சின் வீச்சை குறைத்து விடுகிறது. இதுபோன்று பல சம்பவங்கள் நிஜத்தில் நடந்தும் இதுவரை போலீசில் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்பட வில்லை, ஒருமுறைகூட இதுபோன்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதில்லை என்று இயக்குனர் விளக்கம் அளித்த போது அதிர்ச்சி அடையாமலிருக்க முடியவில்லை.
படத்தில் பல கதாபாத்திரங்கள் தங்களது இயல்பான நடிப்பால் கடந்துபோகின்றனர்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் வழக்கிற்கான வீடியோ ஆதாரம் கொடுக்க பயன்பட்டிருக்கிறார்.
அரசு அதிகாரியாக வரும் அழகம் பெருமாள், வக்கீலாக வரும் சண்முகநாதன் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரித் துள்ளார். ரமேஷ் இசை காட்சியுடன் ஒன்றி நிற்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் பொறுப்பை தீர்க்கமான எண்ணத் துடன் கையாண்டிருக்கிறார் தீபக். ஒரு தீர்ப்பு உதட்டுவரை வந்து வெளிப்படாமல் முடங்கி விடுவ தற்கு காரணம்தான் புரியவில்லை.
விட்னஸ் – சாட்சிகளும் சில சமயம் தோற்று விடுகிறது என்பதை பட்டவர்த்தனமாக படம் பிடித்தி ருக்கிறது.
சோனி லைவ் ஒ டி டி தளத்தில் இது வெளியாகியுள்ளது.

