Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல்ஹாசன் உடல்நிலை பற்றி மருத்துவமனை அறிக்கை

2 ஆண்டுகளுக்கு முன் பிரச்னைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இந்தியன்-2ம் பாகம்  படப்பிடிபப்பு சமீபத்தில் தொடங்கியது.  இதில் கமல் ஹாசன் மும்முரமாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தனியார் டி.வியின்  பிக்பாஸ்  நிகழ்ச்சி யிலும் பங்கேற்று வருகிறார். மற்றொரு புறம் மக்கள் நீதி மய்யம் , கட்சி பணியிலும்  ஈடுபடுகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்  கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நேற்று மதியம் சென்னை திரும்பிய நிலையில்,  அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வழக்கமான பரிசோதனைக் காகவே கமல்ஹாசன் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். டாக்டர்கள் ஓய்வு எடுக்க சொன்ன தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ,’கமல்ஹாசன்  காய்ச்சல் காரணமாக. மருத்துவனயில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வருகிறது.  ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்’ என தெரிவித் துள்ளது.

Related posts

PETTAKAALI TRAILER LAUNCHED WITH ACTUAL JALLIKATTU

Jai Chandran

ராதிகா தயாரிப்பில் சரத் நடிக்கும் இரை: ராஜேஷ் எம். செல்வா டைரக்ஷன்

Jai Chandran

Vijay Deverakonda’s LIGER Next Schedule GOA

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend