Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நயன்தாரா, விக்னேஷ்சிவன் திருமண விழாவில் ரஜினிகாந்த் வாழ்த்து

பிரபல நடிகை நயன்தாரா, இயக்குனர் விகேஷ் சிவனுக்கு இடையே நானும் ரவுடிதான் படத்தின்போது காதல் மலர்ந்தது.  அன்றுமுதல் இணைபிரியாத காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். சுமார் 8 வருடத்துக்கும்  மேலாக இவர்கள் காதல் நீடித்தது.  அவ்வப்போது  இருவருக்கும் திருமணம் நடந்துவிட்ட தாக வதந்தியும்   பரவிய வண்ணம இருந்தது. ஆனால் நயன்தாரா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் திருமணம் தள்ளிப்போனது. காத்திருந்த காலம்   வீண்போகவில்லை விக்னேஷ்  சிவன்,  நயன்தாரா காதல் கைகூடி வந்தது.

விக்னேஷ்சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் இன்று ஜூன் 9ம் தேதி  நடந்தது. திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத்குமார், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இந்தி நடிகர் ஷாருக்கான், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும் பங்கேற்றவர்கள் விவரம் வருமாறு:

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி,  கிருத்திகா உதயநிதி,
சரத்குமார், ராதிகா சரத்குமார்,
ஷாலினி அஜித்குமார்,  அனோஷ்கா அஜித்குமார்,  ஆத்விக் அஜித்குமார்,
ஷாமிலி, விக்ரம் பிரபு, பொன்வண்ணன், திலிப் ( மலையாளம் நடிகர்), கவின் திவ்ய தர்ஷினி, நடிகைகள் குஷ்பு, சரண்யா,

தயாரிப்பலர்கள் டாக்டர் ஐசரி கே கணேஷ், லைகா தமிழ் குமரன்,
கல்பாத்தி எஸ்.அகோரம், ஞானவேல்ராஜா,  2D ராஜசேகர் பாண்டியன்,  டிரைடன் ஆர்ட்ஸ் ரவி
லலித் குமார்,  எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்,
சாந்தி பிலிம்ஸ் அருண்,

இசை அமைப்பளர் ஏஆர்.ரகுமான்
ஏஆர்ஆர்.அமீன்,  அனிருத்,  ரவி ராகவேந்திரா லக்ஷ்மி ராகவேந்திரா

இயக்குனர்கள் கேஎஸ் ரவிக்குமார்
மணிரத்தினம்,  கௌதம் வாசுதேவ் மேனன்,  விஷ்ணுவர்தன்,  அனு வர்தன்,
அட்லி, ஹரி,  மோகன் ராஜா,  எடிட்டர் மோகன்,  பிரீதா ஹரி ,

ஒளிப்பதிவாளர்கள் ஓம்பிரகாஷ், வெற்றி
வேல்ராஜ்,  தினேஷ் கிருஷ்ணன்

நடனி  இயக்குனர்கள் தரண் குமார்,
கலா மாஸ்டர்,  சதீஷ்,  சோனி அசோக் பர்வாணி, பாடலாசிரியர் தாமரை

முன்னதாக நயன்தாரா, விக்னேஷ்சிவன் திருமணத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்றோர்  1 லட்சம் பேருக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Related posts

Vijay Sethupathi starrer ‘ACE’ First Single Release

Jai Chandran

பராசக்தி (பட விமர்சனம்)

Jai Chandran

தமிழகத்தில் ஒன் ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி: கமல்ஹாசன் மெசேஜ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend