Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மூத்த நடிகர் கிருஷ்ணாவுக்கு நடிகர் சங்கம், டி.ராஜேந்தர் இரங்கல்

தெலுங்கு மூத்த நடிகர் கிருஷ்ணா இன்று மரணம்.  அடைந்தார். அவருக்கு திரையுலகினர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள  இரங்கல் அறிக்கை

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல் வாதியாகவும் விளங்கிய மூத்த நடிகர் கிருஷ்ணா மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். நடிகர்

கிருஷ்ணா அவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் இயங்கி வந்தவர். அவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பத்மபூஷன், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர். மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது மகன் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத் தாருக்கும் தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

இவ்வாறு  தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர் தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவிற்கு நடிகர், இயக்குநர் மற்றும் தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ ஆலோசகர். டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள  இரங்கல் :

மனிதநேயத்தின் மறுஉருவம்
எளிமையின் இருப்பிடம்
திறமையின் பிறப்பிடம்

தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப்பறந்த மாபெரும் நடிகர் கிருஷ்ணா அவர்களுடைய மறைவு என் மனதிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல் களை தெரிவித்துகொள் கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு டி ராஜேந்தர் கூறியுள்ளார்.

Filmchamber Ex President Kattagaddaprasad

Shri.KRISHNA sir is one of the greatest gentlemen among film artists and known for his humble behavior and his genuine qualities to support a film producer. He ensured all his film producers made money when making films with him. His magnanimous attitude, simplicity, generosity, devotion to film industry and punctuality were impregnable. May his soul rest in peace

 

Related posts

விஜய் ரசிகர் தயாரிப்பாளரானார்

Jai Chandran

உடன்பிறப்பே (பட விமர்சனம்)

Jai Chandran

மாயோனையும் பக்ரீத்தையும் இணைக்கும் நிலா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend