Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

படவேட்டு (பட விமர்சனம்)

படம்: படவேட்டு

நடிப்பு: நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன், ஷைம் டாம் சக்கோ, விஜயராகவன், மனோஜ் ஓமன், சுரேஷ்

தயாரிப்பு: யோட்லி பிலிம்ஸ், சன்னி வயோன்

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு : தீபக் டி மேனன்

இயக்கம்: லிஜ்ஜு கிருஷ்ணா

மனதளவில் அதிர்ச்சியி லிருக்கும் ரவி(நிவின் பாலி) எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலிருக் கிறார். மழை வந்தால் வீடு ஒழுகுவதால் ரவியை அவரது அம்மா திட்டுகிறார். இவர்களது ஏழ்மையை பயன் படுத்தும் அரசியல்வாதி ஒருவர் ரவியின் வீட்டை புதுப்பித்து தந்து வீட்டு எதிரே ஸ்பான்சர் செய்து புதுப்பித்தது என்று கட்யின் சி கல்வெட்டு நடுகிறார். வேலையில் லாமல் வெட்டியாக இருக்கும் ரவியை ஊரே ஸ்பான்சர் ரவி என கிண்டல் செய்கிறது. அதே அரசியல் கூட்டம்ல விவசாயிகளின் நிலங்களையும் அபகரிக்க திட்டமிடு கிறது. இதில் கோபம் அடையும் ரவி, கட்சி யினர் தன் வீட்டுமுன் வைத்திருந்த கல்வெட்டை உடைத்து நொறுக்குகிறான். மேலும் விவசாயிகளை ஏமாற்றும் அரசியல் வாதியின் முகத்தி ரையை கிழித்து கிராமத்து மக்களின் நிலங்களை எப்படி
மீட்டு தருகிறான் என்பதே படவேட்டு பட கிளைமாக்ஸ்.

மலையாளத்தில் உருவாகியிருக்கும் இப்படம் கேரளாவின் கிராமப்பகுதியில் படமாகியிருக்கிறது. நிவின்பாலியும், கிராமத்து மக்களும் இயல்பாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஒரு கிரமத்தின் நிகழ்வை அங்கேயே வாழ்ந்து அனுபவித்த உணர்வை தருகிறது படம்.

முதல்பாதிவரை மந்தமாகவே வரும் நிவின்பாலி இரண்டாம் பாதியில் மெல்ல வேகமெடுக்கிறார். கிளைமாக்ஸில் அசல் ஹீரோவாகி ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து சரவெடியாக வெடிக்கி றார்.

தன் கிராமத்தை சேர்ந்தவனை சிலர் அடிப்பதைக் கண்டு ஆவேசம் அடையும் நிவின் பாலி அந்த ரவுடிகளை சேற்றில் துவைத்தெடுத்து விரட்டும் போதுnம், தன் வீட்டை ஆக்ரமித்து அட்டகாசம் செய்யும் அரசியல் ரவுடிகளை நெய்யப்புடைத்து தெறிக்கவிடுவதும் பரபரப்பு.

அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் தலைகாட்டி யிருக் கிறார். அலட்டல் இல்லாத அவரது இயற்கையான நடிப்பு ஒரு கிராமத்து பெண்ணின் வெளிப்பாடு.
அரசியல்வாதியாக வரும் நடிகரின் நடிப்பு மறைந்த திலகனை ஞாபகப்படுத்துகிறது.

மலையாளத்தில் அரசியல்வாதிகளை தோலுரிக்கும் படங்களை இயக்கி வில்லங்கமான இயக்குனர் லிஜ்ஜு கிருஷ்ணா இதில் அரசியல் சூழ்ச்சியை அம்பலப்படுத்துயுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசை இறுதிகட்டம் நெருங்க நெருங்க உச்சத்தை தொடர்கிறது.

தீபக் டி மேனன் சினிமாத்தனமில்லாமல் காட்சிகளைன் படமாக்கியிருக்கும் விதம் பிளஸ்.

படவேட்டு- கிழியும் அரசியல் முகத்திரை.

 

Related posts

ரவி தேஜா படத்தில் இணைந்த அனுபம் கேர்

Jai Chandran

Radhe Shyam Teaser 80 Million+ Views In 24 Hours,

Jai Chandran

சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக மனோ பாலா தேர்வு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend