Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் (,பட விமர்சனம்)

படம்: காலங்களில் அவள் வசந்தம

நடிப்பு: கவுஷிக்ராம், அஞ்சலி, ஹீரோஷினி, மேத்யூ வர்கிஸ், ஜெயா சுவாமிநாதன், சுவாமி நாதன், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், அருண், தருண் பிரபாகர், வி.ஜே.ராஜு, சவுந்தர்யா, ராஜம்மா, டாக்டர் மணி கண்டன், டாக்டர் பாயல் மணிகண்டன்

தயாரிப்பு:ஸ்ரீ ஸ்டுடியோஸ், அறம் என்டர்டெயின்மென்ட்

இசை: ஹரி எஸ்.ஆர்.

ஒளிப்பதிவு : கோபி ஜகதீஸ்ப்வரன்

இயக்கம்: ராகவ் மிர்தத்

பி. ஆர் ஒ: நிகில் முருகன்

சினிமா மோகம் கொண்ட ஷியாம் (கவுஷிக்) தன்னுடைய காதலியை சினிமா பாணியிலேயே காதலிக்க எண்ணுகிறார். அனுராதாவிடம் (ஹீரோஷினி) காதல் கொள்ளும் அவர் மறுநாள் தன் வீட்டுக்கு வரும் தந்தைlயின் நண்பர் மகள் ராதே ( அஞ்சலி) அழகில் மயங்குகிறார். ராதேக்கும் ஷியாமை பிடித்துப்  போக இருவருக்கும் திருமணம் நடக்கிறது. மனைவியிடமும் சினிமா பாணியில் காதலை வெளிப்படுத்த அதை வெறுக்கும் ராதே எதார்த்தமாக இருக்குமாறு சொல்கிறாள். இதனால் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகின்றனர். இந்நிலையில் பழைய காதலி அனுராதாவை ஷியாம் சந்திக்கி றான். அவளுடன் சேர எண்ணு கிறான். இதன் முடிவு என்ன? , ராதே வுடன் ஷியாம் இணைந் தானா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

சினிமா மோகத்தில் பார்க்கும் பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டு சுற்றும் பல இளவட்டங்களுக்கு சரியான படிப்பினை படமாக உருவாகி யிருக்கிறது “காலங்களில் அவள் வசந்தம்”.

புதுமுக ஹீரோ கவுசிக் துள்ளலான நடிப்வை வெளியிட்டிருக்கிறார். ஹீரோஷினி தங்கியிருக்கும் வீட்டுக்கு வெளியே கொட்டும் மழையில் நனைந்தபடி பப்பாளி பாடல் பாடப் போவதாக கூறி அவரை காதலில் விழ வைப்பதும் பின்னர் தன் வீட்டுக்கு வரும் அஞ்சலியின் அழகில் மயங்கு வதும் இளமை குறும்பு.

கவுசிக்கின் அப்பாவித்தனமான பேச்சை கண்டு மயங்கும் அஞ்சலி அவரிடம் ” நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்பது திடீர் ஷாக். உடனடியாக குடும்பத்தாரும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது கதையை வேகமாக நகர்த்துகிறது.

அஞ்சலி இயல்பான வாழ்கையை விரும்பினாலும் கவுசிக் அவரிடம் சினிமாத்தமான ரொமான்ஸ் செய்யலாம் என்று கேட்பதும் ஒரு கட்டத்தில் அதுவே அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதும் நிஜத்தின் பிரதிபலிப்பு.

கிளைமாக்ஸில் வில்லனிடம் சிக்கிக் கொள்ளும் கவுசிக் உயிர்போகும் பயத்தில் துப்பாக்கி முனையில் தன் மனைவியிடம் கண்ணீர் விட்டு கதறி பேசுவது நெகிழ்ச்சி.

அஞ்சலி இயற்கையான நடிப்பில் கவர்கிறார். சினிமா ரொமான்ஸ் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என கவுசிகிற்கு அவர் புரிய வைக்கும் முயற்சிகளில் தெளி வான பேச்சும், அசலான முகபாவங் களும் வெளிப்படுத் தியுள்ளார்.

கவுசிக் காதலியாக வரும் ஹீரோஷினி வெகுளித்தனமாக நடித்து கவர்கிறார்.

கவுசிக்கின் நண்பராக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் தரும் அட்வைஸ்கள் அர்த்த முள்ளவை. இளம்ஜோடிகளுக்கு இடையே ஏற்படும் மனக்சப்பை எளிதாக தீர்த்துக் கொள்ளும் சரியான வழி . ஈகோவை கைவிட்டு ஸாரி கேட்டாலே பல விவாகரத்துக் களை தவிர்க்கலாம் என்ற வசனம் பலரது வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும்.

ஸ்ரீ ஸ்டுடியோஸ், அறம் என்டர்ன டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

ஹரி எஸ்.ஆர். இசையில் பப்பாளி பாடல் உதட்டில் ஒட்டிக்கொள் கிறது.

ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ்ப்வரன் வண்ண மயமாக காட்சிகளை படமாக்கியுள்ளார்.

வெறும் காதல் படமாக இல்லாமல் வாழ்க் கைக்கு எந்த காதல் மகிழ்ச்சியை தரும் என்பதை வெகு இயல் பாக சொல்லியிருக்கும் ராகவ் மிர்தத் குடும்பங் களின் பாராட்டை அள்ளுவார். அதே சமயம் சில காட்சிகள் ரிபீட் ஆகி படத்தின் வேகத்துக்கு முட்டுக் கட்டை போடுகிறது.

காலங்களில் அவள் வசந்தம் – மனதை தொடும்.

Related posts

Director RajivMenon about KadaisiVivasayi !!

Jai Chandran

TwoTwoTwo from Kaathu Vaakula Rendu Kaadhal

Jai Chandran

பவிஷ், குஷ்பு மகள் நடிக்கும் அட்டாக்கர் படப்பிடிப்பு துவங்கியது..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend