Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சிவி 2 ( பட விமர்சனம்)

படம் : சிவி2

நடிப்பு: யோகி, தேஜ், சுவாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம், சந்தோஷ், குமரன்

தயாரிப்பு: துளசி சினி ஆர்ட்ஸ் லலிதா கஸ்தூரி கண்ணன்

இசை: எஃப். எஸ்.ஃபாசில்

ஒளிப்பதிவு: பி.எல்.சஞ்ஜய்

இயககம்: கே ஆர்.செந்தில்நாதன்

பி.ஆர். ஒ: கே.குமரேசன்

விஸ்காம் மாணவ மாணவிகள் 9 பேர் ஒரு குழுவாக இயங்கு கின்றனர். பல வருடங் களுக்கு முன் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய நர்ஸ் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளி களை எல்லாம் கொல் கிறார். இதனால் அந்த மருத்துவமனை சீல் வைக்கப்படுகிறது. அங்கு அந்த நர்ஸ் பேயாக உலவுதாகவும் தகவல் பரவு கிறது. அந்த மருத்துவ மனைக்கு விஸ்காம் மாணவ மாணவிகளை அனுப்பி அங்கு நடக்கும் அமானுஷ்யங் களை நேரடியாக யூ டியூபில் ஒளிபரப்ப முடிவு செய்கிறார் தேஜ். திட்டப்படி மாணவர்கள் மருத்துவமனைக்குள் நுழைகின்றனர். அதன்பிறகு நடக்கும் அமானுஷ்யங்கள் படபடப்பை எகிற வைக்கிறது.

வழக்கமான காதல், ஆக்‌ஷன் என்றில்  லாமல் புதிய பாணி யில் ஒரு திகில் படத்தை தர வேண்டும் என்ற இயக்கு னரின் எண்ணம் பகுதியாக நிறைவேறியிருக்கிறது.

இந்த கேமிராவில் என்ன பதிவாகியிருக் கிறது பார்த்து சொல் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சாம்ஸிடம் பொறுப்பு கொடுத்ததும் அதில் சாம்ஸ் பாரக்கப்போவது திகில் சம்பவங்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. ஒவ்வொரு வீடியோவாக சாம்ஸ் பார்க்கும்போதும் அதில் சில பிராங்க் காட்சிகள் இருப்பதும் திடீரென்று நர்ஸின் ஆவி பேயாட்டம் ஆடி விஸ்காம் மாணவ மாணவிகளை அலற விடும்போதும் திகில் பரவுகிறது.

கிருஷ்ணா, தேஜ் ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமாக நடித்து காட்சிகளை நகர்த்தி செல்கின்றனர். நந்தினி நர்ஸாக வரும் சுவாதி மருத்துவமனை யில் கையில் கிடைப்பவர்களை எல்லாம் கொன்று குவிப்பது ஷாக்.

துளசி சினி ஆர்ட்ஸ் லலிதா கஸ்தூரி கண்ணன் தயாரித்திருக்கிறார்.

எஃப். எஸ்.ஃபாசில் இசை  ஒகே ரகம்
பி.எல்.சஞ்ஜய் திகில் கிளப்புவதற்கான ஜிம்மிக்ஸ் வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்.

கே ஆர்.செந்தில்நாதன் ஹாலிவுட் பாணியில் காட்சிகளை அமைத்திருக்கி றார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சில குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.

சிவி 2 – படபடப்பு.

Related posts

Periya Pazhuvettaraiyar with 64 war scars: Sarathkumar

Jai Chandran

Animal Welfare Associations praise Komal Sharma

Jai Chandran

DiaryTeaser will be released by Karthi Rana Tomorrow

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend