ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அது ஜீ5-யின் மாபெரும் வெப் சீரிஸான “தந்துவிட்டேன் என்னை” பற்றிய அறிவிப்பு. இது மாபெரும் வெற்றிபெற்ற மராத்தி சீரிஸான ‘ஹோனர் சுன் மே ஹ்யா கர்ச்சி’-யின் ரீமேக் ஆகும். “தந்துவிட்டேன் என்னை” ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்காகவும், ஒரு குடும்பத்தில் எழும் இயல்பான மற்றும் நகைச்சுவையான சூழல்களின் கலவையாகவும் இருக்கும்.
“தந்துவிட்டேன் என்னை” சீரிஸில் அஷ்வின் மற்றும் ஹரிப்ரியா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்வேறு பிரபல சீரியல்களில் பிரதான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள்.
பிரபல நடிகை சீதா இந்த வெப் சீரிஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.தர்ஷா குப்தா, ரெதிகா ஸ்ரீனிவாஸ், ராகவி, துர்கா, நீபா இன்னும் பல்வேறு பிரபலமான நடிகர்களும் இந்த மாபெரும் படைப்பின் அங்கமாக உள்ளனர்.
இந்த வெப் சீரிஸை ராஜீவ் கே பிரசாத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘சதுரன்’ என்ற ஒரு தமிழ் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பு & கிரியேட்டிவ் ஹெட் – V. முரளி ராமன்
எழுத்து – S. குமரேசன். ஒளிப்பதிவு – A. வினோத் பாரதி
“தந்துவிட்டேன் என்னை” அக்டோபர் 23 அன்று ஜீ5 க்ளப்பில் அதிகாரபூர்வமாக வெளியாகிறது.