Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கார்கி (பட விமர்சனம்)

படம்: கார்கி

நடிப்பு: சாய் பல்லவி, காளிவெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், அனிஷ்டா ஆனந்த், வி.ஜெயப்பிரகாஷ், கேப்டன் பிரதாப், வேதா பிரேம்குமார், லிவிங்ஸ்டன், கவிதாலயா கிருஷ்ணன், டாக்டர் என்.சுதா, வின்னர் ராமச்சந்திரன்

தயாரிப்பு: ரவிச்சந்திரன் ராமசந்திரன் , தாமஸ் ஜார்ஜ், ஐஸ் வர்யா லக்ஷ் மி
வி, கவுதம் ராமச்சந்திரன்

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: சிரயந்தி, பிரேம்கிருஷ்ணா அக்கடு

இயக்கம்: கவுதம் ராமச்சந்திரன்

பி ஆர் ஓ: கே.குமரேசன்

பள்ளிக்கூட டீச்சர் சாய் பல்லவி  (கார்கி) வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்புகிறார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக இருக்கும் தனது தந்தையை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருப்ப தாக அறிந்து தந்தையை அழைத்துவர போலீஸ் நிலையம் செல்கிறார். அங்கு மற்றொரு அதிர்ச்சி அவரை நிலைகுலைய வைக்கிறது. சிறுமி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டதை யறிந்து பதறுகிறார் கார்கி. தனது தந்தை மீது பொய் குற்றச்சாட்டு சொல்வதாக கூறி அவரை விடுவிக்க கேட்கிறார். ஆனால் தந்தையை பார்க்கக்கூட விடாமல் கார்கியை போலீஸ் துரத்தி யடிக்கிறது. சட்டப்படி கோர்ட்டில் தனது தந்தை மீதான பழியை துடைத்து அவரை விடுவிக்க முடிவு செய்கிறார். குடும்ப நண்பரான வக்கீல் ஜெயப்பிரகாஷ் இந்த வழக்கில் வாதாட முடிவு செய்கிறார். ஆனால் வக்கீல் சங்கம் விதித்த தடையை ஏற்று வழக்கில் வாதாட மறுத்துவிடு கிறார். என்னசெய்வதென்று தெடியாமல் தவிக்கும் கார்கிக்கு உதவ முன்வருகிறார் ஜெயபிரகாஷிடம் ஜூனியராக இருக்கும் காளி வெங்கட். சாய்பல்லவி அதை ஏற்று வழக்கு நடத்துகிறார். மீளவே முடியாது என்று பலர் சொன்னாலும் காளி வெங்கட் சாமர்த்தியமாக வாதாடி சாய் பல்லவி தந்தையை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார். கதை இத்தோடு முடியவில்லை. மீண்டும் வழக்கு நடக்கிறது. அதில் தந்தை நிரபராதியாக வெளியில் வரும் சூழலில் திடீர் திருப்பம் நடக்கிறது. அதில் கார்க்கி எடுக்கும் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸின் ஹைலைட்.

ஆண்டுகள் பல கடந்தும் “ரவுடி பேபி” சாய் பல்லவிதான் ரசிகர்கள் மனதில் ஆட்கொண்டி ருக்கிறார். அந்த இமேஜை உடைத்து அழுத்தமான கார்க்கி கதாபாத்திரமாக புதிய பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

போலீஸ் எதிர்த்தாலும், வக்கீல் கைவிட்ட போதும், மீடியாக்கள் எதிராக இருந்தும், ஊரே எதிர்த்தபோதும் தந்தையை மீட்டே தீருவேன் என சாய் பல்லவி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மனதை உரமேற்றுகிறது.

ஜாமினில் வெளியில் வரும் ஆர்.எஸ்.சிவாஜியை வீட்டிலேயே வெட்டிச் சாய்க்க கத்தியுடன் வரும் சரவணனை கண்டு சாய் பல்லவி அதிர்ச்சியில் உறைவதும் அங்கு எதிர்பாராத திருப்பம் ஏற்படுவதும் பதற்றத்தை தணிக்கிறது.

விதிப்படி நடக்கட்டும் என்று தனது தாயே மனம் தளர்ந்து சொல்ல, ” நான் ஒரு பெண் என்பதால்தானே நம்ப மறுக்கிறாய். அதே பையனாக இருந்தால் நம்புவே இல்லையா?” என்று கலங்கும்போது சாய்பல்லவின் கோபம் அர்த்தம் பொதிந்து கண்ணீராக பீறிடுகிறது.

 

காளி வெங்கட்டுக்கு இதுவரை இப்படியொரு கதாபாத்திரம் கிடைத்த தில்லை. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தியிருப்பதுடன் கோர்ட்டில் பாயின்ட் பிடித்து வாதாடி அரசு வக்கீலை திணறடிப்பது அப்ளாஸ் பெறுகிறது.

திருநங்கையாக வரும் நீதிபதி திருநங்கைகள் மீது தனி மரியாதையை வரவழைக்கிறார்.

ரவிச்சந்திரன் ராமச்சந்திரன் , தாமஸ் ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ் மி வி, கவுதம் ராமசந்திரன் இணைந்து தயாரித்தி ருக்கின்றனர்.

சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து காட்சிகளை சரியான விதத்தில் கையாண்டு கிளைமாக்ஸ் வரும் வரை ரசிகர்களை இருக்கையிலிருந்து எழ விடாமால் ஆணியில் அறைந்துவிடு கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்.

சிரயந்தி, பிரேம்கிருஷ்ணா அக்கடு கேமிரா ஜிம்மிக்ஸ் வேலைகள் செய்யாமல் எதார்த்த சூழலை அமைத்து காட்சிகளை நிஜமாக கண் முன் நிகழ வைக்கிறது.

கோவிந்த் வசந்தா இசை எல்லை மீறாமல் எல்லைக் கோட்டுக்குள் சுழன்றிருப்பது காட்சிகளின் அழுத்தத்தை அதிகரித்துக் காட்டியிருக்கிறது.

கார்க்கி – இவள் ஒரு பெண் போராளி

Related posts

THE JEPPIAAR ICON AWARDS 2026…

Jai Chandran

Lydian Nadhaswaram’s new global attempt

Jai Chandran

எஸ் டி ஆர் 49-ல் சந்தானம் நடிப்பது ஏன்? டி டி நெக்ஸ்ட் விழாவில் சிம்பு ஓபன் டாக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend