படம்: லெக் பீஸ்
நடிப்பு: யோகிபாபு, வி டி வி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவணா சுப்பையா, ஜி.மாரிமுத்து, சாம்ஸ், மது சூதன ராவ், ஶ்ரீநாத், மணிகண்டன்
தயாரிப்பு: சி மணிகண்டன்
இசை: பிஜோர்ன் சுர்ரவ்
ஒளிப்பதிவு: மாசாணி
கதை, திரைக்கதை,
வசனம்: எஸ் ஏ பத்மநாபன்
இயக்கம்: ஶ்ரீ நாத்
பி ஆர் ஒ: சதீஸ்
கொலை, திகில், பெண்ணியம், என்றுதான் சமீப காலமாக படங்கள் வருகின்றன. காமெடி ஜர்னர் ஒன்று இருப்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். அந்த பாணியில் படம் இயக்கி இப்போதும் சக்சஸ் தந்துக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி. அவரது பாணியில் ஒரு காமெடி படமாக வந்திருக்கிறது லெக் பீஸ்.
சாலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அனாமத்தாக இருக்கிறது. அதை பார்க்கும் மணிகண்டன், ரமேஷ் திலக், கருணாகரன், ஶ்ரீநாத் அந்த பாயின்ட்டில் நண்பர்கள் ஆகின்றனர். எந்த 3 ஆயிரம் ரூபாய் நோட்டு மகிழ்ச்சி தந்ததோ அதுவே பெரிய பிரச்சனையிலும் அவர்களை சிக்க வைக்கிறது. அவர்கள்
சிக்கிய பிரச்சனை என்ன? அதிலிருந்து மீண்டார்களா என்பதற்கு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
கதாபாத்திரங்களை கேட்டாலே குபீர் சிரிப்பு கொப்பளிக்கும். சவுரி
முடி விற்பவர் மணிகண்டன், கிளி ஜோஸ்யம் சொல்பவர் கருணாகரன், பேய் விரட்டுபவர் ஸ்ரீநாத், பலகுரல் பேசுபவர் ரமேஷ் திலக். இந்த நான்கு பேர்கள் அடிக்கும் ரவுசு ஒரு பக்கமென்றால்
யோகிபாபு, வி டி வி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் இன்னொரு பக்கம் ரவுசு காட்டி காமெடி சரவெடி கொளுத்துகின்றனர்.
மனைவி பற்றி யோகி பாபு அடிக்கும் கமென்ட்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன.மொட்டை ராஜேந்திரனை சுற்றி கதை பயணிக்கிறது.
காமெடியுடன் கொஞ்சம் த்ரில்லர் கலந்திருப்பதால் வெறும் பாலுடன் பாதம் கலந்ததுபோன்ற சுவையாகி விடுகிறது படம்.
சரி, லெக் பீஸ் டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்ககிறது படம் பாருங்கள்.
சி மணிகண்டன் படத்தை தயாரித்திருக்கிறார்.
கதை, திரைக்கதை,
வசனத்தை திருப்பங்களுடனும் காமெடி பஞ்சுடனும் எஸ் ஏ பத்மநாபன் எழுதியிருக்கிறார்.
இசை அமைப்பாளர் பிஜோர்ன் சுர்ரவ் , அனிருத் பாடல், டி ஆர் பாடல் என்று கலக்கியிருக்கிறார் என்னவொன்று இசை அமைப்பாளர் தன் பெயரை இவ்வளவு கடினமாக இல்லாமல் கொஞ்சம் எளிதாக மாற்றினால் இன்னும் பல இயக்குனர்களின் கவனத்தை பெறுவார்.
நட்சத்திர பட்டாளம் அதிகம் இருந்தாலும் அவர்களுக்கான ஸ்பேசும் அதிகம் தந்திருக்கும் இயக்குனர் ஶ்ரீநாத் வெற்றிக்கான பார்முலாவை சரியாக கையாண்டிருக்கிறார்.
மாசாணியின் கேமிரா காமெடியை கலர்ஃபுல்லாக்கி இருக்கிறது.
லெக் பீஸ் – நண்பர்களுடனும், குடும்பத்துடனும் பார்த்து வயிறு முட்ட சிரித்துவிட்டு வரலாம்.