Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தி வாரியர் ( பட விமர்சனம்)

படம்: தி வாரியர்

நடிப்பு: ராம் பொத்னேனி, கிர்த்தி ஷெட்டி, நதியா, கிங்ஸ்லி, ஜெயபிரகாஷ், ஆதி

தயாரிப்பு: ஸ்ரீனிவாசா சிட்டுரி

இசை: தேவி ஸ்ரீபிரசாத்

ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ்

இயக்கம்: லிங்குசாமி

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா D One

மதுரையை தனது ரவுடித்தனத்தால் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ஆதி. தன் மீது யாராவது போலீஸில் புகார் கொடுத்தால் உடனே அவர்களை வெட்டிச் சாய்க்கிறார். அதையும் மீறி அவர் மீது புகார் தருகிறார் டாக்டர் ராம் பொத்னேனி. அவரை நடுவீதியில் வைத்து அடித்து துவம்சம் செய்து குற்றுயிராக கம்பியில் தொங்கவிட்டு செல்கிறார் ஆதி. இதை யடுத்து ராம் ஊரைவிட்டு செல்கிறார். சில வருடங்கள் கழித்து ஐ பி எஸ் ஆகி புதிய வேகம், கோபத்துடன் மதுரைக்கு போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதன் பிறகு ராம், ஆதி மோதல் தீவிரமாகிறது. ஆதியின் அடியாட்களை பந்தாடும் ராம் ஒருகட்டத்தில் ஆதியை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆவேசம் அடைந்த ஆதி எப்படியோ சிறையிலி ருந்து வெளியே வந்து ராம் போத்னே னியை அடித்து சாகடிக்க முடிவு செய்கி றார். எதற்கும் அஞ்சாத ராமின் தாய் நதியா, “குற்றவாளியை தேடிப்போய் அடி என்கிறார். அதே கோபத்துடன் ஆதியை தேடி வருகிறார் ராம். இருவருக்கும் நடு வீதியில் மோதல் நடக்கிறது. தன்னை எப்படி ஆதி அடித்து கம்பியில் தொங்க விட்டாரோ அதே இடத்தில் ஆதியை ராம் அடித்து தொங்கவிட்டு பழிதீர்க்கிறார்.

லிங்குசாமி படம் என்றாலே கமர்ஷியல் கலவையுடன் ஆக்‌ஷன் அதிரடியிருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தி வாரியார். டோலிவுட் ஹீரோ ராம் பொத்னேனியை கோலிவுட்டுக்கு ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தி உள்ளார்.

ராம் போத்னேனி இடைவேளை வரை டாக்டராக அழகான தோற்றத்தில் வருகி றார். இரண்டாம் பாதியில் அப்படியே உல்டாவாக ஆக்‌ஷன் ஹீரோ தோற்றத் துக்கு மாறி ரவுடி கூட்டத்தை நய்யபுடைக் கிறார்.

ஆதியின் வீட்டுக்கே சென்று சவால்விடும் ராம் அங்கிருந்து புறப்படும்போது அவர் மீது காளையை ஆதி ஏவிவிட அதன் கொம்பை பிடித்து ஒற்றே அடியில் வீழ்த்தி அதிர வைக்கிறார் ராம். இப்படி அடுத்த டுத்து பல ஆக்‌ஷன் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கிறார்.

ராமின் காதலி கிர்த்தி ஷெட்டியை ஆதி கடத்தியதும் எந்த பதற்றமும் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்தபடி மவுனம் சாதித்து ஆதியின் மனதில் நடுக்கத்தை வரவழைத்து காதலியை விடுவிப்பது விறுவிறு.

ரேடியோ ஜாக்கி விசில் மகாலட்சுமியாக வந்து கவர்கிறார் கிர்த்தி ஷெட்டி. நடன காட்சிகளில் குறிப்பாக புல்லட் பாடல் காட்சியில் உதட்டிலேயே புல்லட் ஓட்டி ஆடும் போது ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறார். இந்த பாடல் காட்சியில் ராம் பொத்னேனியும் ரப்பர்போல் வளைந்தாடி மிரள வைக்கிறார். இந்த புல்லட் பாடலுக்கு சிலம்பரசன் டி.ஆர் பின்னணி குரல்கொடுத்து பாடியிருப்பது பிளஸ்.

படம் முழுக்க ஆதியின் ரவுடித்தனம் கொடிகட்டி பறக்கிறது. தன் ஹீரோ இமேஜை பொருட்படுத்தாமல் முழுசாக வில்லனாகியிருப்பதன் மூலம் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

ராம் போத்னேனியின் தாயாக வரும் நதியா மகனை சத்யத்துக்காக போராடும்படி தூண்டும்போது அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஸ்ரீனிவாசா சிட்டுரி அதிக பொருட்செல வில் படத்தை தயாரித்திருக்கிறார்.

படத்தில் மற்றொரு ஹீரோவாக மாறியிருக்கிறார் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். பாடல்களுக்கு ஆட்டம்போட வைப்பதுடன் பின்னணி இசையிலும் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறார்.

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு வண்ணம் தீட்டி உள்ளது.

லிங்குசாமி முழுமையாக ஆக்‌ஷன் இயக்குனராக மாறியிருக்கிறார். காட்சி களை வலுவாக வைத்திருந்தாலும் கதைக் கருவில் இன்னும் சென்சேஷ னான விஷயத்தை தொட்டிருக்கலாம்.

தி வாரியார்- ஆக்‌ஷன் அதிரடியுடன் கூடிய கமர்ஷியல் பேக்கேஜ்.

Related posts

சிரஞ்சீவியின் “விஸ்வம்பரா” பட அதிரடி ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

Katrina Kaif – Michelle Lee Towel fight scene in Tiger 3

Jai Chandran

தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend