Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வேழம் (பட விமர்சனம்)

படம்: வேழம்

நடிப்பு: அசோக்செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன், கிட்டி, ஷியாம் சுந்தர், பி.எல் தேனப்பன், அஜய், மோகன் அக்‌ஷய், டி.ஆர்.கிரண், அபிஷேக், ஷாதிகா, ராதிகா, திலீபன்

தயாரிப்பு: கே ஃபோர் கிடரியேஷன்

இசை:சந்தர்

ஒளிப்பதிவு: அரவிந்த்

இயக்கம்: ஷியாம்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா

பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன் சிறுவயது முதல் அன்பாக பழகுகின்றனர். வயதுக்கு வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். இந்நிலையில் அசோக்கும், ஐஸ்வர்யாவும் டூ வீலரில் ஜாலி ரைடாக காட்டுப்பகுதிக்கு சென்று திரும்பும்போது ரோட்டை மறித்தபடி கார் நிற்கிறது. அதையெடுத்து ஓரமாக விட்டு வழி ஏற்படுத்தும் அசோக் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் செல்லமுயலும்போது அவரை காணாமல் பதறுகிறார். அவரை சிலர் கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். கொலைகாரன் யார் என்பது தெரியாமல் அசோக் திணறு கிறார். எப்படியாவது அவனை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார். இதற்கிடையில் கதை ஆசிரியை ஜனனியுடன் அசோக் பழகுகிறார். அசோக்கை காதலிக்க தொடங்கும் ஜனனி தன் காதலை வெளிப்படுத்த அதை ஏற்க மறுக்கிறார் அசோக். எங்கெங்கோ தேடி கொலை யாளி ஐஸ்வர்யாவின் மாமன் தான் என்று கண்டுபிடித்து அவரை கொல்ல முயல்கிறார். ஆனால் அவர் கொலையாளி இல்லை என்று தெரிய வருகிறது. பிறகு கொலை யாளி யார்? ஜனனி காதல் என்னவானது போன்ற பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட கிளை மாக்ஸ் உள்ள கதையாக வேழம் உருவாகியிருக்கிறது. வேழம் என்றால் யானை. அடிபட்ட யானை ஞாபகம் வைத்திருந்து பழிவாங்கும் என்பது கதையின் கரு.

அசோக் செல்வன் இரண்டு படத்தில் தரவேண்டிய உழைப்பை ஒரே படத்தில் தந்திருக்கிறார்.

கதை த்ரில்லர் கதையாக நகரப்போகிறது என்பதை முதல் காட்சியிலேயே அமைச்சர் மகன் கொலை செய்யப்பட்டிருப்பதை காட்டி ரசிகர்களை தயார்படுத்தி விடுகிறார் இயக்ஜுனர்.

தன்னை கொலையாளி தாக்கும்போது ” கம்முனு இருந்தா உயிரோடு இருப்ப” என்று சொல்லும் ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு வருடக்கணக்கில் கொலையாளியை அசோக் தேடுவதும் ஒருகட்டத்தில் அந்த குரலுக்கு சொந்தக்காரனை கண்டுபிடித்ததும் ஆவேசமாக தாக்கி அடித்தே கொலை செய்யும் அசோக் அதிர்ச்சி யூட்டுகிறார். ஆனால் கொலைகாரன் அவன் இல்லை என்று தெரியும்போது கதையில் மீண்டும் ஒரு டிவிட்ஸ்ட்.

ஒவ்வொருமுறையும் தான் சந்தேகப்படுபவர் உண்மை கொலைகாரன் இல்லை என்று தெரியவரும்போது அசோக் ஷாக் ஆவதும் கடைசியில் ஐஸ்வர்யாவின் கதி என்ன என்பதை அறிந்து இடிந்து போவதும் டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்.

ஐஸ்வர்யா மேனன், ஜனனி இரட்டை நாயகிகளாக நடித்தி ருக்கின்றனர். கதாபாத் திரத்தை வீணாக்காமல் பயன் படுத்திக் கொண்டிருக் கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஷியாம் சுந்தர் வில்லத் தனத்தில் விளாசுகிறார்.

கதை தொடர்ச்சியாக திருப்பங்களுடன் நகர்ந்தாலும் ரிலாக்ஸ் ஆவதற்கு கொஞ்சமும் இடமில்லாதது மைனஸ். காமெடி வைத்திருக் கலாம்.

கே ஃபோர் கிரியேஷன் தயாரித்திருக்கிறது.

சந்தர் இசையில் மெலடி பாடல் இதயம் வருடுகிறது.

அரவிந்த் ஒளிப்பதிவு தெளிவு.

ஷியாமின் இயக்கம் சோடையில்லை.

வேழம்- கிரைம் த்ரில்லர்.

Related posts

அமேசான் ஒரிஜினல் சீரிஸ் “பம்பாய் மேரி ஜான்” ட்ரெய்லர் வெளியீடு

Jai Chandran

தனுஷ்- ரசிகர்களை சந்திக்க இந்தியா வரும் ஹாலிவுட் இயக்குனர்கள்

Jai Chandran

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend