Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மாமனிதன் (பட விமர்சனம்)

படம்: மாமனிதன்

நடிப்பு: விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜூவல் மேரி

தயாரிப்பு: யுவன் சங்கர் ராஜா

இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: எம். சுகுமார்

இயக்கம் சீனு ராமசாமி

ரிலீஸ் : ஆர் கே சுரேஷ்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

தேனி பண்ணைபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் விஜய் சேதுபதி. தன் ஆட்டோ வில் பயணிக்கும் பெரியவர் ஒருவர் மகள் திருமணத்துக்கு வாங்கிய நகையை தவறவிட்டு செல் கிறார். அவர் வீட்டுக்கு சென்று நகையை ஒப்படைக்கும் விஜய்சேதுபதி பெரியவரின் மகள் காயத்ரி அழகில் மயங்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் காயத்ரியை மணக்கிறார். பிள்ளைகளை கான்வென்ட்டில் படிக்க வைக்க எண்ணும் விஜய்சேதுபதி அதற்காக கூடுதலாக சம்பதிக்க எண்ணி ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகிறார். ஊர்மக் களிடம் பணம் வாங்கி நிலத் துக்கு சொந்தக்காரரிடம் அளிக்கிறார். மறுநாள் பத்திர பதிவு நடக்க உள்ள நிலையில் பணத்துடன் நில சொந்தக்காரர் ஏமாற்றிவிட்டு ஓடுகிறார். இதனால் விஜய்சேதுபதி மீது பழி விழுகிறது. ஊர்மக்கள் அவர் மீது போலீஸில் புகார் தருகின்றனர். தன்னை கைது செய்துவிட்டால் தன் குடும்பம் அனாதையாகிவிடும் என்றெண்ணும் விஜய்சேதுபதி ஊரிலிருந்து தப்பித்து பணத்தை ஏமாற்றியவரை தேடி கேரளா செல்கிறார். விஜய் சேதுபதியால் அந்த ஏமாற்றுக்காரரை கண்டு பிடிக்க முடிந்ததா? அவரது குடும்பம் என்னவானது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சில படங்கள் சினிமாத்தனம் இல்லாமல் வாழ்க்கையின் எதார்த்தை மையமாக வைத்து உருவாகும் அந்த வகை படம்தான் மாமனிதன்.

நடிப்பை அதன்போக்கில்விட்டு நடிப்பவர் விஜய் சேதுபதி. அதுவும் இதுபோன்ற கதாபத்திரமென்றால் மூழ்கியே போவார். ஆட்டோ ஓட்டுனராக அறிமுகமாகும் அவர் பயணி களை ஏற்றிக்கொண்டு சர்வசாதாரணமாக ஆட்டோவை ஓட்டிச் செல்லும்போது உண்மையிலேயே அவர் ஆட்டோ ஓட்டி பழகியிருக்கும் ஸ்டைல் தெரிகிறது.
குழந்தைகள் மீது பாசம்காட்டி அவர்களுக்கு முத்தமிட்டு கொஞ்சும்போது தந்தையின் பாசத்தை வெளிப்படுத்து கிறார்.

ஊர்மக்களிடம் பணத்தை வாங்கி யாரிடமோ கொடுத்து ஏமாந்துவிட்டோமே என்று பயந்து ஊரைவிட்டு ஓடும் விஜய்சேதுபதி தன் நண்பர் குருசோமசுந்தரத்தை சந்தித்து தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லி கதறும் போது கல்மனதையும் கரைய வைத்துவிடுகிறார்.

கேரளாவில் ரியல் எஸ்டேட் ஆளை தேடிவரும் விஜய் சேதுபதி அவர் கிடைக்காததால் பிழைப்பை ஓட்ட பாத்ரூம் கழுவும் வேலை பார்த்து காத்திருப்பதும் பின்னர் காசியில் சென்று அன்ன சத்திரத்தில் பணியாற்றுவதும் ஒருவனுடைய வாழ்க்கையில் எதிர்பாராத சோதனை தாக்கி னால் என்னவெல்லாம் அவதிக் குள்ளாக வேண்டியிருக்கும் என்ற ஒரு படிப்பினையாக மனதில் உயர்கிறார் விஜய் சேதுபதி.

காயத்ரிக்கு கனமான கதாபாத்திரம். அதை தாங்கிப்பிடித்து நடித்து பாஸ்மார்க் பெற்றிருக்கிறார்.

விஜய்சேதுபதி நண்பராக வரும் குரு சோமசுந்தரம் கதாபாத்திரத்தோடு ஒன்றியி ருக்குறார்.

இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருக்கின்றனர்.

யுவன்சங்கர்ராஜா தயாரித்திருக்கிறார்.

எம்.சுகுமார் பொறுப்போடு தெளிவான ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வாழ்வியல் உணர்வுகளை எதார்த்தமாக சொல்லி மனதை கனக்கச் செய்யும் இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்திலும் அந்த பாணியை கையாண்டு இமைகளை ஈரமாக்குகிறார்.

மாமனிதன் – தூரத்திலிருந் தாலும் குடும்பத்தை காப்பவன்.

Related posts

ஜி.வி.பிரகாஷ்- ஐஸ்வர்யா டியர் படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

154 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட கமல்ஹாசன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend