Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளம் அடல்ட் காமெடி ஜானரில் ‘பஸ் கரோ ஆன்ட்டி

ஸ்டார் ஸ்டுடியோஸ் , ஆர. எஸ் வி பி மூவிஸ் மற்றும் ராய் கபூர் பிலிம்ஸ் தயாரிப்பில், புதுமை படைப்புகளை வழங்கும் கூட்டணியான நிதீஷ் திவாரி மற்றும் அஷ்வினி திவாரி இளம் அடல்ட் காமெடி ஜானரில் ‘பஸ் கரோ ஆன்ட்டி (BAS KARO AUNTY ) திரைப்படத்தை அறிவித்துள்ளனர் !

வருண் அகர்வாலின் எழுத்தில் அதிகம் விற்பனையான புத்தகமான ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company’ என்ற புத்தகத்தை அடிப்படை யாகக் கொண்டு, அறிமுக இயக்குனர் அபிஷேக் சின்ஹா ​​இயக்கும் இந்த திரைப்படத்தில் இஷ்வாக் சிங் & மஹிமா மக்வானா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியா சினிமாவின் முன்மாதிரியான திரைப்படங்களான “தங்கல், சிச்சோரே, சில்லர் பார்ட்டி” போன்ற திரைப்படங் களை படைத்த மேதை தேசிய விருது பெற்ற இயக்குனர் நித்தேஷ் திவாரி, மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி  ஸ்டார் ஸ்டுடியோஸ் , , ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோருடன் இணைந்து அடலட் காமெடி திரைப்படத்தை உருவாக்கு கின்றனர். ‘பஸ் கரோ ஆன்ட்டி’, வருண் அகர்வாலின் எழுத்தில் விற்பனையில் அசத்தும் ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company’ என்ற நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படம் இன்றைய இளைஞர் களின் நிஜ வாழ்க்கை அனுபவத்தைப் பற்றியது மற்றும் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையில் இறங்கி முயற்சிப்பது மற்றும் ஒருவரின் கனவுகளைத் துரத்துவது எனும் வாழ்க்கை முறையில், அவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் மற்றும் காதல், அவர்களின் இக்கட்டான நிலை போன்ற வற்றை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இளம் இந்தியா வின் ஆர்வத்தையும் தொழில்முனை வோரின் உணர்வையும், நகைச்சுவை நிறைந்த, ஊக்கமளிக்கும் கதையாக இப்படம் சொல்கிறது.

பஸ் கரோ ஆண்டி திரைப்படத்திற்காக தங்கல் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அதன் வெற்றிகரமான தயாரிப்பா ளர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இஷ்வாக் சிங் (Rocket Boys, Paatal Lok) மற்றும் மஹிமா மக்வானா (Antim) ஆகியோர் கதை மாந்தர்களாக நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் அபிஷேக் சின்ஹா இயக்க, நிதேஷ் திவாரி மற்றும் நிகில் மெஹ்ரோத்ரா திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படம், இன்றைய இளைய சமுதாயத்தின் வாழ்க்கைமுறை மற்றும் Gen Z உடைய வாழ்கைமுறையை முழு மனதுடன் பேசுவதாக அமைந்துள்ளது. உணர்வுபூர் வமான கதை மற்றும் ஊக்கமளிக்கும் தருணங்களுடன் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக இப்படம் இருக்கும். பஸ் கரோ ஆன்ட்டி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு, மும்பை முழுவதும் படமாக்கப்பட்டுவருகிறது.

புதுமையான் கதைகளை அழுத்தமான படைப்பாளிகளான நித்தேஷ் திவாரி மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி கூறும்போது,
​​”வருண் அகர்வாலின் பயணம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது, மேலும் இந்த திரைப்படம் வளர்ந்து வரும் தொழில்முனைவோரின் கதையை மையமாகக் கொண்டதாக இருப்பது மிகவும் பிடித்திருந்தது. எங்கள் திரைப் படம் தேசத்தின் மனநிலையையும் இளைய சமுதாயத்தின் ஆர்வத்தையும் படம்பிடித்து காட்டும். ஒரு நிறுவனம் உருவாக்கும் எண்ணத்தை தடுக்க முயற்சிக்கும் எல்லோருக்கும் “பஸ் கரோ, ஆன்ட்டி!” ஒரு சரியான பதிலாக இருக்கும்!”

ஸ்யுடியோ டிஸ்னி ஸ்டார் தலைவர் பிக்ரம் துகல் கூறியதாவது….
“ஸ்டார் ஸ்டுடியோஸ் உடைய ஒத்துழைப்புடன், சிறந்த படைப்பாற்றல் உள்ளவர்களுடன் இணைந்து, பரந்த பார்வையாளர்களை இணைக்கும் விதமான தனித்துவமான கதைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். பஸ் கரோ ஆன்ட்டி இளம் உள்ளங்களை கவரும் மகிழ்ச்சியான கதை, மேலும் இந்த வேடிக்கையான பொழுதுபோக்கை வழங்குவதற்காக முன்னணி திறமையாளர்களான நிதேஷ் திவாரி, ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி ஆகியோருடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!” என்றார்.

Related posts

First Look of Comedy Entertainer ‘Marriage Story’ Unveiled..

Jai Chandran

Vijay Antony’s Next Film title is “LAWYER”!

Jai Chandran

உலக அறிவுசார் சொத்துரிமை தின நிகழ்வு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend