Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டிக்கிலோனா (பட விமர்சனம்)

படம்: டிக்கிலோனா

நடிப்பு: சந்தானம், அனகா. ஷெரின் காஞ்ச்வாலா யோகி பாபு, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஹர்பஜன்சிங்,

தயாரிப்பு: கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ஜெ. ராஜேஷ்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: அர்வி
இயக்கம்: கார்த்திக் யோகி

சைன்ஸ் பிக்சன் என்றாலே ஆர்வமாக பார்க்கத் தூண்டும் கதைகளம். அந்த களத்தை காமெடியுடன் மிக்ஸ் செய்து இன்னும் இன்ட்டிரஸ்டிங்காக கதையை அமைத்திருக் கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. அந்த கதைக்கு சந்தானம்தான் பொருத்தம் என்பதுபோல் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

2027ம் ஆண்டில் மனைவியுடன் வசிக்கும் சந்தானத்துக்கு குடும்பத்தி லும் நிம்மதி இல்லை,. ஹாக்கி விளையாட்டில் சாதிக்க எண்ணி அதிலும் சாதிக்க முடியாமல் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். கல்யாணத்தை செய்யா மலிருந்தால் நிம்மதியாவது இருந்திருக்கும் என்று வருந்தும் சந்தானத்துக்கு தனது கல்யாணத்தை டைம் மிஷின் மூலம் கடந்த காலத்துக்கு சென்று திருமணத்தை நிறுத்தலாம் என்ற வாய்ப்பு அமைகிறது. அதை பயன்படுத்த எண்ணும் சந்தானம் டைம்மிஷினில் அமர்ந்து 2020 காலகட்டத்துக்கு வருகிறார். மணமகனாக இருக்கும் மற்றொரு சந்தானத்திடம் திருமணத்தை நிறுத்த சொல்கிறார். முதலில் அதை ஏற்க மறுக்கும் அவரை மின் ஊழியர் சந்தானம் டைம்மிஷினில் 2027ம் ஆண்டுக்கு அழைத்துச் சென்று மனைவியுடன் படும் அவஸ்த்தையை காட்டு கிறார் அதைக்கண்டு ஷாக் ஆகும் மணமகன் சந்தானம் தனது திருமணத்தை நிறுத்தி மற்றொரு பெண்ணை காதலிக்கிறார். அந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் விவாகரத்தில் சென்று நிற்கிறது. அந்த திருமணத்துக்கு மனைவி யிடம் திட்டு வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதே மேல் என்று எண்ணுகிறார். மீண்டும் 2027ம் ஆண்டுக்கு வந்து மனைவியுடன் சந்தானத்தால் இணைய முடிகிறதா என்பது கிளைமாக்ஸ்.
மூன்று வித கதாபாத் திரங்களில் காமெடியில் வெளுத்து வாங்கி இருக்கி றார் சந்தானம். மனைவியாக வரும் அனகா, காதலியாக வரும் ஷெரின் காஞ்ச்வாலா இருவருடனும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் சந்தானம். குழப்பமான காட்சிகளை குழப்பாமல் உள்வாங்கி நடித்திருக்கும் சந்தானம் ஒன்றுக்கு பலமுறை கதையை கேட்டு தெளிவடைந்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.

சில காட்சிகள் ஏற்கனவே வெளியான டைம்மிஷின் படங்களில் பார்த்த காட்சிகள்போல் இருந் தாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை .

அனகா மனைவியாகவும், காதலியாக ஷெரின் காஞ்ச்வாலாவும் நல்ல நடிப்பை வழங்கி கதையின் டென்ஷன் குறையாமல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
சந்தானம் காமெடியுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் என மற்றொரு காமெடி பட்டாளம் சரவெடி கொளுத்தி போடுகிறது.

கெஸ்ட்ரோலில் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார்

அர்வி ஒளிப்பதிவு தெளிவு. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது.

டிக்கிலோனா – சிரிக்கவும் சிந்திக்கவும்..

 

Related posts

வரும் 23ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி

Jai Chandran

Disney+ Hotstar to premiere Amala Paul starrer ‘Cadaver’

Jai Chandran

First Look of the Multi-Starrer Movie Sorry

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend