Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விஷமக்காரன் (பட விமர்சனம்)

படம்: விஷமக்காரன்

நடிப்பு: வி, அனிகா விக்ரமன், சைத்ரா ரெட்டி

தயாரிப்பு: ஹனி பிரேம் ஒர்க்ஸ்

இசை : கவின்- ஆதித்யா

ஒளிப்பதிவு : ஜெ.கல்யாண்

இயக்கம் : வி

பி.ஆர்.ஒ: கே எஸ் கே செல்வா

அக்னி (வி) ஒரு மனநல மருத்துவர். மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் மனகசப்பை நீக்கும் டாக்டர். அக்னியும் தரங்கிணியும் (சைத்ரா ரெட்டி) காதலிக்கின்றனர்.
வேலைக்காக வெளிநாடு செல்ல எண்ணும் தரங்கிணி திடீரென்று அக்னியை பிரிவதுடன் அவன் மீதான காதலையும் தூக்கி எறிகிறார்கள். இந்நிலையில் ஐகிரியுடன் (அனிகா) அக்னிக்கு காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திடீரென்று ஒருநாள் அக்னி பழைய காதலி தரங்கிணியை சந்திக்கிறார். அவளுக்கு உதவ அக்னி எண்ண மனைவி ஐகிரியோ அவளுடன் பேச வேண்டாம் என்று எச்சரிப்பதுடன் இருவரையும் சேர்த்துவைத்து பேசுகிறாள். கேமரா மறைத்து வைத்து இருவரையும் வேவு பார்க்கிறார்கள். இந்த விஷயம் கணவருக்கு தெரியும் நிலை யில் அடுத்து நடப்பது என்ன என்பதற்கு விடை சொல்கிறது படம்.

விஷமக்காரன் என டைட்டிலுக்கு ஏற்ப ஹீரோ வி, விஷமம் செய்ய அது வில்லங் கத்தில் முடிகிறது. மற்றொருவரின் மனதை தன்வயப்படுத்தி அவர்களை தன் எண்ணத்துக்கு ஏற்ப செயல்பட வைக்கும் மனோத்துவ ரீதியிலான மாறுபட்ட கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். இதில் இயக்குனரும் ஹீரோவும் வி என்ற ஒருவர்தான்.

படத்தின் தொடக்கத்திலேயே manupulate (கையாளுதல்) என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ஒருவரிடம் அவர்களுக்கு சாதகமாகவே பேசி அவர்கள் மனதை தன் வயப்படுத்தி நம் எண்ணத்துக்கு ஏற்ப அவர்களை எப்படி செயல்பட வைக்கலாம் என்று சொல்லப் படுகிறது.
அதையே செயல் முறை விளக்கமாக முழுபடமாக உருவாக்கி இருக்கிறார் வி.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மூன்றுதான். அதில் வி, அனிதா விக்ரமன், சைத்ரா ரெட்டி நடித்திருக்கின் றனர். இவர்களை சுற்றித்தான் முழுகதையும் நகர்கிறது.

வி, அனிதா சந்திப்பு ஒரு டாக்டரிடம் ஆலோசனைக்கு வரும் நபர் என்றுதான் தொடங்குகிறது. பின்னர் அது காதலாக மாற திடீரென்று வி தன் காதலை அனிதாவிடம் சொல்வதெல்லாம் எதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

அனிதாவிடம் தனது முதல் காதலி சைத்ரா ரெட்டி பற்றி வி சொல்லும்போதே இவர்தான் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடப்போகும் பெண்ணாக இருப்பார் என்று யூகிக்க முடியவில்லை.

திருமணத்துக்கு பிறகு மனமொருமித்த தம்பதிகளாக வாழும் வி, அனிகாவுக்கு இடையே திடீரென்று சைத்ரா என்ட்ரி கொடுத்ததும் அனிகா மனதில் சந்தேக நெருப்பு பற்றிக்கொள்கிறது. அதுநாளுக்குநாள் வளர்ந்து கணவனை கண்காணிக்க ஸ்பை கேமராக்கள் பொருத்துவதும் அதன் வழியாக வி, சைத்ரா இருவரையும் கண்காணிப்பதும் பின்னர் அதுவே அனிகா வாழ்க்கைக்கு வேட்டு வைப்பதும் எதிர்பார்த்த திருப்பங்கள். ஆனால் இந்த செயல் பாடுகள் அனைத்தையும் அனுதாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வி நடத்தும் நாடகம் என்பது கிளை மாக்சில் தெரியவரும்போது ஆச்சரியம் மேலிடுகிறது.

சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலாக நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

ஹனி பிரேம் ஒர்க்ஸ் தயாரித் திருக்கும் இப்படத்தை கையடக்க நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு இயக்கி இருக்கிறார் வி. கமர்ஷியல் கலப்படங்கள் எதையும் கையாளாமல் ஒரு ஜெயகாந்தன் கதையை படித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ஜெ.கல்யாண் ஒளிப்பதிவு கண்களுக்கு வண்ணக் கண்ணாடிகளை மாட்டிவிடு கிறது.

கவின்- ஆதித்யா இசை காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.

விஷமக்காரன் – ரெட்டை குதிரை சவாரி செய்யும் விவரமானவன்.

Related posts

பெரிய பட வாய்ப்பால், புதுபட புரமோஷனுக்கு நடிகை வர மறுப்பு

Jai Chandran

Disney+ Hotstar releases the teaser of Goli Soda – The Rising’

Jai Chandran

Sakshi Agarwal plays the female lead in Guest: Chapter-2..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend