Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லண்டனில் தமிழ்த்துறை மீளுருவாக்க ராதிகா ரூ 1 லட்சம் நன்கொடை

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

முன்னதாக ஐக்கிய இங்கிலாந்து தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தி னராக நடிகை ராதிகா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர்  தலைமை தாங்கினார்.

இதனைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2022 அனறு  ராதிகா சரத்குமார் இங்கிலாந்து தமிழ்துறை குழுவினருடன் லண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, நன்கொடைக்கான காசோலையை தமிழ்த்துறை குழுவினருக்கு வழங்கினார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்  துறை மீளுருவாக்கம் செய்ய 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது. நன்கொடை செய்ய விருப்பம் உள்ளவர் www.tamilstudiesuk.org என்ற தளத்தில் சென்று வழங்கலாம்.

Related posts

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது..

Jai Chandran

பட்டாம்பூச்சி ( பட விமர்சனம்)

Jai Chandran

Chella kutties #Bagheera – Trailer from October 8th..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend