Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கட்டம் சொல்லுது (பட விமர்சனம்)

படம்: கட்டம் சொல்லுது
நடிப்பு: தீபா சங்கர், எஸ்.ஜி.எழிலன், டி.திடியன், சு.சின்னதுரை. சகுந்தலா, ராஜா அய்யப்பன், ஜே.சபரிஸ், மணிவாசகன், வீரமணி, வி.ராணிஜெயா

இசை: தமீம் சன்சாரி

தயாரிப்பு: கண்ணா கணேசன்

ஒளிப்பதிவு:ஜே.சபரிஷ்

இயக்கம்:எஸ்.ஜி.எழிலன்

தீபா சங்கர் திருமண மண்டபத்துக்கு சென்று தனது மகள் திருமணத்துக்காக அட்வான்ஸ் தொகை தந்துவிட்டு சமையல்காரர், பந்தல் அலங்காரம் என்று எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு யார் மாப்பிள்ளை என்று ஒருவர் கேட்க இனிமேதான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பதில் சொல்லி அதிர்ச்சி தருகிறார். 6
மாதத்துக்குள் மகளுக்கு திருமணம் நடக்காவிட்டால் அதன்பிறகு மகளுக்கு திருமணமே நடக்காது என்று குறி சொல்லும் பெண் சொன்னதால் மாப்பிள்ளையே பார்க்காமல் திருமண ஏற்பாடு செய்கிறார் தீபா. அதே சமயம் வெளிமாநிலத்தை சேர்ந்த சரித்திர பெயர் கொண்ட ஒருவன்தான் மாப்பிள்ளையாக அமைவான் என்று குறி சொன்னதால் சில மாப்பிள்ளை ஜாதகங்களை வைத்துக்கொண்டு ஜோதிடம் பார்க்க செல்கிறார். அந்த இடத்தில் ஒரு அப்ராணியாக தீபாவிடம் சிக்கிக்கொள்கிறர் டி.திடியன். அவரை வைத்து எப்படியாவது மாப்பிள்ளையை தேடிப் பிடித்துவிடலாம் என்று எண்ணி அவரிடம் நண்பர்கள் பற்றி விசாரிக் கிறார். அதுவே கதையாக நீள்கிறது.முடிவில் தீபா தன் மகளுக்கு மாப்பிள்ளையை கண்டுபிடித்தாரா என்பதை ருசிகரமாக படம் விளக்கு கிறது.

இதில் பிரதான வேடத்தில் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் தாயாக தீபா சங்கர் நடித்திருக்கி றார். கிராமத்துதனமான அவரது பேச்சில் எதார்த்தம் வெளிப்படுகிறது. ஜோதிடம் பார்க்க சென்ற இடத்தில்
அங்கிருக்கும் டி.திடியன்(உத்ராபதி கதாபாத்திரம்) தீபாவிடம் சிக்கிக் கொண்டு நண்பர்களின் கதையை சொல்லி படும்பாடு சிரிப்பை வரவழைக்கிறது.
அடிக்கடி பிளாஷ் பேக்காக வரும் 4 நண்பர்களின் கதையிலும் நகைச்சுவை இழையோடுவதால் படம் தொடர் காமெடி சரவெடியாக வெடிக்கிறது.
வந்தியத்தேவன் என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஜே.எழிலன் நடித்திருக்கிறார். எஞ்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றும் அவர் தனது தந்தையிடம் கன்னத்தில் அறை வாங்கியே கன்னம் பழுத்துப் போகிறது.

அப்பாவுக்கு தெரியாமல் செய்யும் எல்லா வேலையும் அவருக்கு தெரிந்துவிடுவதால் தன்னைப்பற்றி தனது தந்தையிடம் போட்டுக் கொடுப்பது யார் என்று தெரியாமல் எழிலன் திணறுவது கலகல.

தன்னையும் ஒரு பெண் காதலிப்பதாக சொல்ல அவரை பெண் கேட்டு வீட்டுக்கு சென்று அங்கு யாரோ வைக்கும் வத்தியில் திருமணம் தடைபட்டு நொந்துபோகும்போது குபீர் சிரிப்பை வரவழைக்கிறார்.

மகளுக்காக மாப்பிள்ளை தேடும் தீபாவின் நடிப்பில் உருக்கமும் கலகலப்பும் போட்டி போடுகிறது.

சக நண்பர்களாக நடித்திருப்பவர்கள் மற்றும் ஹீரோவின் தாயாக நடித்திருக் கும் சகுந்தலா, தந்தையாக நடித் திருக்கும் சின்னத்துரை என எல்லோருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்து வலு சேர்க்கின்றனர்.
ஜே.சபரிஷின் ஒளிப்பதிவு. தமீம் அன்சாரியின் இசை எல்லாமே அளவு மீறாமல் கட்டத்துக்குள் அடங்கி உள்ளது.
ஜோதிடத்தை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கும் எழிலன் சில சமயம் ஜோதிடம் ஒரு புருடா என்கிறார், சில சமயம் ஜோதிடப்படி எல்லாம் நடக்கிறது என்பதுபோல் மதில்மேல் பூனையாக சமாளித்திருக்கிறார்.அதே சமயம் ஜாலியான, கலகலப்பான நடிப்பின் மூலம் மனதில் பதிகிறார்.

கட்டம் சொல்லுது- கொரோனா கால காமெடி ரிலாக்ஸ்.

Related posts

கண்ணதாசன். எம்.எஸ்.வி பிறந்தநாளில் கமல் புகழாரம்..

Jai Chandran

நயன்தாரா-விக்னேஷ் சிவன் பாராட்டி வாங்கிய கூழாங்கல்

Jai Chandran

பாயும் ஒளி நீ எனக்கு (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend