Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அகடு (பட விமர்சனம்)

படம்: அகடு
நடிப்ப்: ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக். அஞ்சலி நாயர், ரவீனா
தயாரிப்பு: விடியல் ராஜ், எஸ்.சுரேஷ்குமார்
இணை தயாரிப்பாளர்: சஞ்சீவ், யுவராஜ் சிங்காரவேலு
இசை: ஜான் சிவநேசன்
ஒளிப்பதிவு:சாம்ராட்
இயக்கம்:எஸ்.சுரேஷ்குமார்

பி ஆர்.ஒ: குமரேசன்

சிதார்த், ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்ட 4 நண்பர்கள் கொடைக்கானல் சுற்றுலா வருகின்றனர். அதே சமயம் டாக்டர் தம்பதிஒன்றும் தன்னுடைய மகளுடன் வருகிறது. வந்த இடத்தில் 4 நண்பர்களும் டாக்டர் குடும்பமும் நண்பர்கள் ஆகின்றனர். திடீரென்று ஒரு நாள் நண்பர்களில் ஒருவரும், டாக்டருன் மகளும் காணாமல் போகின்றனர். மகள் காணாமல் போனதையடுத்து டாக்டர் போலீசில் புகார் தருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் மற்ற 3 நண்பர்களை கைதுசெய்து மிரட்டி விசாரிக்கிறார்.காணாமல் போன இரண்டு பேர் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலிடத்தி லிருந்து வரும் அழுத்தம் காரணமாக ஜான் விஜய் விசாரணையை தீவிரமாக்குகிறார். அப்போது காணாமல் போனவர்களில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. அவரை கொன்றது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் அருமையான ஒரு சஸ்பென்ஸ் கதையை தந்திருக்கிறார். அகடு என்ற வார்த்தை ரொம்ப புதுசா இருக்கே என்று எண்ண வேண்டாம் ரொம்பவே பழைய வார்த்தை.. திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு குரல் அகடு என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. அகடு என்றால் பொல்லாங்கு அல்லதும் தீமை.

விஜய் டி வி சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இவருடன் 3 இளம் வாலிபர்கள் நண்பர்களாக நடித்திருக் கின்றனர்.

கொடைக்கானலை ஜாலியாக சுற்றிக்காட்டும் இயக்குனர் திடீரென்று கதையை சஸ்பென்ஸ் எல்லைக்கு கொண்டு சென்று அதன் மர்ம முடிச்சுகள் கிளைமாஸ்வரை கட்டிக்காத்திருப்பது படத்தின் வேகத்தை ஒரே சீராக வைக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் தனது ஸ்டைலில் நடித்திருக் கிறார். கொஞ்சம் போலீஸ் திமிர், கொஞ்சல் புலனாய்வு என்று கதையை விறுவிறுப்புடன் நகர்த்த தூண்போல் நிற்கிறார்.

கஞ்சா கடத்தும் கும்பல், கொடைக்கானல் எல்லை செக்யூரிட்டி என சக கதாபாத்திரங்களும் கதைக்கு வலு சேர்க்கின்றன. எல்லா பாத்திரங்களிம் மீதும் சந்தேகத்தை ஏற்பட வைத்து கடைசியில் கொலை குற்றவாளி யார் என்பதை வெளிப் படுத்தும்போது ரசிகர்களை அதிர்ச்சியில் உறை வைக்கிறது.

ஜான் சிவநேசம் இசை, சாம்ராட் ஒளிப்பதிவு நேர்த்தி.

இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் முதல் படத்திலேயே பாஸ் மார்க் பெற்றுவிடுகிறார்.

அகடு – கச்சிதமாக செதுக்கப்பட்ட சஸ்பென்ஸ் படைப்பு.

Related posts

Actor Sasikumar’s Birthday gift to Lyricist Murugan Manthiram

Jai Chandran

99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தி ஆறு ( பட விமர்சனம் )

Jai Chandran

Lyca Productions Subaskaran steps into Mollywood

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend