படம்: கசட தபற
நடிப்பு: வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சந்தீப் கிஷன், ஹரிஸ் கல்யாண், சாந்தனு, டி.சிவா, ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, சிஜா ரோஸ், பெஞ்சமின், பஞ்சு சுப்பு, சம்பத், ஜெயபிரகாஷ், சங்கிலி முருகன், யூகி சேது,
தயாரிப்பு: பிளாக் டிக்கெட் கம்பெனி வெங்கட் பிரபு,
ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி.ராஜசேகர், ஷக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர்
இசை: யுவன் ஷ்ங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சாம் சி எஸ். ,சீன் ரோ டன்
இயக்கம்: சிம்பு தேவன்
ரீலீஸ்: சோனி லைவ்
சினிமாவில் மாற்றம் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. நடிகர்கள் தொழில் நுப்ப கலைஞர்கள் தவிர சினிமாவை சொல்லும் விதமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆக்ஷன் படம், மசாலா படம் சோக படம், திகில் படம், நகைச்சுவை படம், குடும்ப படம், காதல் படம் என பல வெரைட்டி கதைகள் வந்துக்கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஆந்தாலஜி பாணி படங்கள் அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை வெவேறு இயக்குனர்கள் இயக்கி அவை மொத்தமாக ஒரு படமாக வெளியாகிறது. அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒரே படத்தில் இயக்குனர் சொல்வதாக படங்கள் வரத் தொடங்கி உள்ளன. தற்போது அந்த வரிசையில் ஹைப்பர் லிங்க் பாணி கதையாக உருவாகி இருக்கிறது கசட தபற.
இயக்குனர் சிம்புதேவன் ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் கவசம், தப்பாட்டம், சதியாடல், பந்தயம், அக்கற அறம்பற்ற போன்ற தலைப்பில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாமே வெவ்வேறு எபிசோட்களாக உருவாக்கப் பட்டிருந்தாலும் எல்லா கதையும் ஒன்றுக்கொண்டு சம்பந்தபட்டதாக எப்படி அமைகிறது என்பதை கிளைமக்ஸ் சொல்கிறது.
தனி அறையில் தங்கி இருக்கும் பிரேம்ஜி மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். அவரது நல்ல குணம் ரெஜினாவை தன்னுடைய காதலியாக அடைகிறார். திருமணம் செய்துகொள்ள தந்தை காட்டும் எதிர்ப்பால் நகைகளை அள்ளிக்கொண்டு வருகிறார் ரெஜினா. திடீரென்று நகைகளை எடுத்துக்கொண்டு பிரேம்ஜி ஓடி விட்டார் என்பது ஷாக் தருகிறது.
கொலைக்கு அஞ்சாத தாதா சம்பத்தின் மகனாக பிறந்தாலும் உயர் படிப்பு படித்து வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராக இருக்கிறார் சாந்தனு. இந்நிலையில் நீதிபதியின் மகளை அவர் காதலிக்கிறார். அந்த காதலை சேர்த்து வைக்க தனது ரவுடித்தனத்தை விட்டுவிட தயாராக இருக்கிறார் சம்பத். திடீரென்று போலீஸ் என்கவுண்ட்டரில் அவர் சுட்டுக்கொள்ளப்படுகிறார்.
இன்ஸ்பெக்டர் சந்தீப் கிஷன் ஆசைப்பட்டு போலீஸ் வேலையில் சேர்க்கிறார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரி சுப்பு பஞ்சு என்கவுண்ட்டர் பணியை தருகிறார். அது பிடிக்காமல் வேலையை விட்டுவிட எண்ணுகிறார் சந்தீப் கிஷன். ஒரு கட்டத்தில் சந்திப்பையே சுட்டு தள்ள முடிவு செய்கிறார் சுப்பு பஞ்சு. அடுத்து நடப்பது என்ன என ஒவ்வொரு கதையும் செல்கிறது.
ஹரிஸ் கல்யாணின் சிறிய முதலீடு பெரிய வருவாய் டெக்னிக்தான் இன்றைய காலகட்டத்தில் பல ஏமாற்றுக்காரர்களின் தொழிலாகி விட்டது என்பதை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறது.
குறிப்பாக விஜயலட்சுமி, வெங்கட் பிரபுவின இறுதி கட்ட கதைகள் நெஞ்சை கனமாக்குகிறது. சத்துணவு பண்யாளராக வரும் விஜயலட்சுமி தனது தாலியை பறித்துக்க்கொண்டு ஒடும் ரவுடியை துரத்திக்கொண்டு ஓடி அவர்களுட்ன் மோதும்போது , அட போட வைக்கிறார்.
முதலாளியின் சதிதிட்டத்தால் தூக்கு மேடைக்கு போகும் வெங்கட் பிரபுவின் உயிர் ஊசலாடும் நிலை என ரசிகர்களை பரபரப்பின் விளிம்புக்கு அழைத்துச் செல்கிறது.
சில இயக்குனர்கள் தங்கள் கதைகளில் முத்திரையை பதிப்ப்பார்கள். அந்த வகையில் இயக்குனர் சிம்பு தேவன் கசட தபற படத்தை புதுமையான பாணியில் இயக்கி முத்திரை பதித்திருக்கிறார்.
ஒவ்வொரு எபி சோடுக்கும் வேறு வேறு இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தப்பட்டு நடசத்திரங்களையும் மாறி மாறி நடிக்க வைத்திருப்பதும் இறுதியில் எல்லா சம்பவங்களும் எப்படி ஒன்னொறுக்கொன்று தொடர்புடையதாகிறது என்பதையும் மிக நேர்த்தியாக இயக்குனர் சிம்புதேவன் அமைத்தமைக்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிக்கலாம்.
கசட தபற – அர்த்தமுள்ள வாழ்க்கை இலக்கணம்.

