Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அந்த நாள் (பட விமர்சனம்)

படம்: அந்த நாள்

நடிப்பு: ஆரியன் ஷாம், ஆத்யா பிரசாத், லீமா எஸ் பாபு, ராஜ்குமார், கிஷோர், இமான் அண்ணாச்சி

தயாரிப்பு: ஆர் ரகுநந்தன்  (கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் )

இசை: என் எஸ் ராபர்ட் சற்குணம்

ஒளிப்பதிவு: சதீஷ் கதிர்வேல்

இயக்கம்: வி வி கதிரேசன்

பி ஆர் ஓ: பெரு துளசி பழனிவேல்

ஆக்சன் படங்கள், பான் இந்தியா படங்கள். என்று கடந்த ஒரு வருடமாகவே திரைகளை  ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இதனால். ஹாரர் பட ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம். அந்த ஏமாற்றத்தை ஈடு செய்யும் வகையில் வந்திருக்கிறது அந்த நாள் திரைப்படம்.

படக்குழு ஒன்று ஈ சி ஆரில் இருக்கும் பங்களாவிற்கு கதை விவாதத்திற்காக செல்கிறது. அந்த இடத்தில்  சில அமானுஷ்யங்கள் அரங்கேற படக் குழுவுக்கு திகில் கிளம்புகிறது.  ஒரு சமயம் அவர்கள் கையில்  கேமரா கிடைக்க அதை பிளே செய்து பார்க்கும்போது எதிர்பாராத அதிர்ச்சிக்.காட்சிகளை  கண்டு ஷாக் ஆகின்றனர். இந்த இடத்தில் இருந்தால் நம்மையும் இங்குள்ள அமானுஷ்ய  பேய் எல்லோரையும் கொன்று விடும் என்று பயந்து அங்கிருந்து தப்பிக்க முயல அவர்களால் அங்கிருந்து வெளியில் செல்ல முடியவில்லை. இந்நிலையில் திடீரென்று ஒரு மர்ம உருவம் ஒவ்வொருவரையாக பலி வாங்குகிறது . அந்த மர்ம உருவம் யார்? எதற்காக படக் குழுவினரை பலி வாங்குகிறது? என்பதற்கெல்லாம் படபடப்புடன் பதில் சொல்கிறது அந்த நாள் திரைப்படம்.

சினிமா உலகை கட்டி ஆளும் ஏ வி எம் குடும்பத்திலிருந்து ஆர்யன் ஷாம் ஒரு புதுமுக நாயகனாக இப்படத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆரம்பபத்திலேயே இப்படி ஒரு திகில்  கதையை தேர்வு செய்தது ரசிகர்கள் மனதில் டக்கென பதிந்து கொள்ளத் தெரிந்த ஒரு யுத்தி.  வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆர்யன்.

சக குழுவினருடன் அமானுஷ்ய பயத்தில் சிக்கி தப்பிக்க முயலும் ஆரியன் திடீரென்று மாற்று அவதாரம் எடுத்து அதிர்ச்சி தருகிறார்.  ஆறடி உயர ஆஜானு பாகு தோற்ற ஆரியன் ஷாம் தமிழ் திரை உலகின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திர ஹீரோவாக வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. முதல் படத்திலேயே நடிப்பிலும் ஆக்ஷன்  காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். கூர்மையான அவரது பார்வை  பிளஸ்.

மலையாளத்தில் பரபரப்பான நடிகையாக  பெயர் பெற்றிருக்கும் ஆதியா பிரசாத் இப்படம் மூலம்  தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.  மலையாளத்தில் அவருக்கு ஏன் அவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இவ்படத்தில் தனது அசத்தல் நடிப்பால் நிரூபித்திருக்கிறார். திகில் காட்சியில் அவர் கண்களை உருட்டி மிரண்டு பார்க்கும் காட்சிகள் பயத்தை கூடுதலாக்குகிறது.

வித்தியாசமான தனது நெல்லை பாஷையால் நக்கலாக பேசி சிரிக்க வைக்கும் இமான் அண்ணாச்சி இப்படத்தில் சமையல்காரர் வேடமிட்டிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் பேய் பயத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் எல்லாம் ஷூட்டிங்கிற்காக ரிகர்சல் செய்கிறார்கள் என்று எண்ணி சர்வ சாதாரணமாக திகில் காட்சியை கையாண்டு அரங்கை கலகலப்பாக்குகிறார் நம்ம அண்ணாச்சி

திகில் படத்திற்கு இசையும் கேமராவும் கைகோர்த்து நின்றால்தான்  காட்சிகள் மிரள வைக்கும். அந்த மிரட்சியை ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல், இசையமைப்பாளர் என் எஸ் ராபர்ட் சற்குணம்  புரிதலோடு தந்திருக்கின்றனர்.

கதை திரைக்கதையை வி வி கதிரேசன் உடன் ஹீரோ ஆர்யன் ஷாம்  இணைந்து பணியாற்றி இருப்பது எதிர்காலத்தில ஆரியனும் ஒரு இயக்குனராக வருவதற்கான சிக்னல் தெரிகிறது.

அந்த நாள் படத்தை இயக்குனர் விவி  கதிரேசன்  திகில் படம் இயக்குகிறோம் என்ற ஒரே உணர்வுடன் கடைசி வரை டெம்போ குறையாமல் விறுவிறுப்பை ஏற்றியிருப்பது  காட்சிகளுக்கு சக்கரம் கட்டி விடுகிறது. இதில் நரபலி  பற்றி வரும் மர்ம முடிச்சி அவிழும்போது   ஆ வென்று வாய் பிளக்க வைக்கிறார்.

அந்த நாள் – ஹாரர் பிரியர்களுக்கு…

 

 

 

 

 

Related posts

“Attraithingal Annilavil” Audio-Trailer Launch Event

Jai Chandran

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் கிருத்திகா உதயநிதி வெளியிட அரவிந்த்சாமி பெற்றார்

Jai Chandran

‘பிரேக்ஃபாஸ்ட்’ பட இசை விழாவில் வைரமுத்து பேச்சு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend