Trending Cinemas Now
சினிமா செய்திகள்

மீண்டும் ஜூன் 21 முதல் சினிமா- டிவி ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி

கொரொனா 2அது அலை காரணமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது.  இதனால் கடந்த 2 மாதங்களாக  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  தற்போது அதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
வருகிற ஜூன் 21ந் தேதி முதல், அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும், கொரொனா வழிகட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது,

Related posts

லண்டன் டயானா மகேந்திரன் விரைவில் டி.வியில் என்ட்ரி

Jai Chandran

ராஜபுத்திரன் (பட விமர்சனம்)

Jai Chandran

கொரோனாவிலிருந்து குணம் அடைந்த விஜயகாந்த்- பிரேமலதா வீடு திரும்பினர்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend