Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவிலிருந்து குணம் அடைந்த விஜயகாந்த்- பிரேமலதா வீடு திரும்பினர்..

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும் கட்சியின் பொருளாளரு மான பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பாதிப்பிலிருந்தனர். கடந்த மாதம் 23ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் நலமாக உள்ளதா கவும், தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதன்பின், விஜயகாந்த் மனைவி பிரேம லதாவுக்கு பரிசோதனை செய்யப் பட்டதில் அவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து அவரும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது விஜயகாந்த், பிரேமலதா இருவருமே கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர். இதையடுத்து, இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப் படுவதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
’விஜயகாந்த், பிரேமலதா இருவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்ததால், சிகிச்சையில் குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்’ என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து விஜயகாந்த பிரேமலதா இருவரும் மருத்துவமனியிலிருது வீடு திரும்பினர்.

Related posts

Director GNR Kumaravelan on Arun Vijay’s Sinam

Jai Chandran

‘ 34th V4 MGR Sivaji Academy Awards ‘ Celebration was a Grand Success.

CCCinema

Bigg Boss Raju debuts as Hero

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend