Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமலுக்கு அதிர்ச்சி தந்த மேலும் 2 முக்கிய நிர்வாகிகள்.. திடீர் விலகலால் பரபரப்பு..

கமல்ஹாசன் நிறுவி தலைமை தங்கி நடத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட் டது. ஒரு தொகுதியிலும் கட்சி ஜெயிக்கவில்லை.
இந்நிலையில் கட்சி நிர்வாகி கள் கூட்டத்தை ,சில தினங் களுக்கு முன் கமல் கூட்டினார். அப்போது கட்சியின் துணைத் தலைவராக இருந்து வந்த மகேந்திரன், ’கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று குற்றச்சாட்டுக்கள் கூறி பதவியையும் கட்சி உறுப்பினர் பொறுப்பி லிருந்தும் ராஜினாமா செய் தார். இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் அக்கட்சியிலிருந்து மேலும் 2 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளது கமல்ஹாசனுக்கும் தொண்டர் களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மநீம கட்சியின் தலைமை கட்சி அலுவலக பொதுச் செயலாளராக இருந்து வந்த சந்தோஷ்பாபு யாரும் எதிர்பாராத வகையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகி இருக்கிறார்.


இதுகுறித்து சந்தோஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது,’ சொந்தக் காரண மாக மநீம கட்சியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். என் மீது அன்பு காட்டிய கட்சி தலைவர் கமல்ஹாசன், மற்றும் தொண்டர்களுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருக் கிறார்.
சொந்த காரணம் என்று சந்தோஷ்பாபு கூறினாலும் சமீபத்தில் அவர் பெயரில் கட்சி சார்பாக வெளியான அறிக்கையில் தனக்கு உடன்பாடில்லாத சில விஷயங்கள் சேர்க்கப்பட்டி ருந்தால் அதிருப்தி அடைந் தார். அதனால்தான் கட்சியிலி ருந்து விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வல ரும் கட்சியின் சுற்றுச் சூழல் பிரிவு நிர்வாகியுமான பத்ம பிரியாவும் அக்கட்சியிலிருந்து திடீரென விலகி இருக்கிறார்.
தனது விலகல் குறித்து டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக் கும் பத்மபிரியா, ‘சில காரணங் களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களு டன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக் கொள்கின்றேன். அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவ ருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்த மைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்த மைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள் ளேன்’ எனக் கூறியுள்ளார்.

Related posts

Team Diary wishing Arulnithi Happy Birthday

Jai Chandran

கொரோனா கொலை குற்றம்

Jai Chandran

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி ?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend