Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

26ம் தேதி முதல் தியேட்டர்கள் மீண்டும் இயங்க தடை அரசு புதுகட்டுப்பாடு

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுமார் 8 மாதங்களுக்கு மேல் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தநிலை மாறி சகஜநிலை திரும்பியது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை நாடுமுழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளது.
தமிழத்தில் நாளை ஞாயிற்று கிழமை 25ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து 26ஆம் தேதி முதல் 20 புதிய கட்டுப்பாடுகளை அரசு பிறப்பித்திருக்கிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிற்பகல் தலைமைச் செய லாளர் உள்ளிட்ட உயரதி காரிகள் ஆலோசனை நடத் தினர். அப்போது ஊரடங்கு பிறப்பிப்பது பற்றி ஆலோசிக் கப்பட்டது. அதன்படி முழு ஊரடங்காக இல்லாமல் பகுதி நேர ஊரடங்காக அதனை அமல்படுத்த முடிவானது.
இதுகுறித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடு விதிமுறை களை அறிவித்திருக்கிறது.
1) திரையரங்குகள், உடற் பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள் இயங்க அனுமதி யில்லை என அறிவிக்கப் பட்டிருக்கிறது.
2) பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி கிடையாது.
3) மாநகராட்சிகள், நகராட்சி களில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி கிடையாது.
4) புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது
5) கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளை யாட்டு சங்கங்கள் செயல்பட தடை.
6) சர்வதேச, தேசிய அளவி லான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
7) திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
8) இறுதி ஊர்வலம், சடங்கு களில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடை யாது
9) உணவகங்கள், டீக்கடை களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.
10) எல்லா வழிபாட்டு தலங் களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை
11) உரிய நடைமுறைகளை பின்பற்றி மக்கள் கூட்ட மில்லாமல் குடமுழுக்கு மட்டும் நடத்தலாம்.
12) மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகள் வழக்கம்போல் இயங்கலாம்.
இதுபோன்ற புதிய கட்டுப் பாடுகளை அரசு அறிவித் திருக்கிறது.

Related posts

Sherif Mohammed is back with first look of “Kattalan”

Jai Chandran

வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு நடிகர் சூரி வாழ்த்து

Jai Chandran

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மு க. ஸ்டாலின் தொகுதி எது?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend