Trending Cinemas Now
அரசியல் செய்திகள் தமிழ் செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாகிறார் என். வி.ரமணா: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக என் வி. ராமணா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கி உள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தலைமை நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) தற்போதைய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. போப்டே உள்ளார்
கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி போப்டே என்.வி. ராமணாவின் பெயரை பரிந்துரை செய்து அனுப்பினார்.
போப்டேவுக்கு அடுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ராமணா. ஆகவே, தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரை ஏற்று என்.வி.ரமணா சுப்ரீம் கோர்ட்டின்  அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார்.
புதிதாக பதவியேற்க உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்.வி.ரமணா 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

Related posts

தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி இடையே புதிய சம்பள ஒப்பந்தம்

Jai Chandran

சிறு பட்ஜெட் படங்கள்: பத்திரிகையாளர் விழாவில் எஸ் ஏ சி வேண்டுகோள்

Jai Chandran

பள்ளி மாணவ, மாணவி முன் “சாணி” படம் தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend