Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நெஞ்சம் மறப்பதில்லை (பட விமர்சனம்)

படம்: நெஞ்சம் மறப்பதில்லை
நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா,
தயாரிப்பு: பி.மதன்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: அர்விந்த் கிருஷ்ணா
இயக்கம்: செல்வராகவன்

தொழில் அதிபர் ராம்சே எஸ்.ஜே.சூர்யா, மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்கிறார். அவர்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள பெரிய சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வருகிறார் மரியம். குழந்தையும் அவருடன் நன்றாக பழகு கிறது. மரியத்தின் அழகில் மயங்கும் எஸ்.ஜே.சூர்யா அவளை அடைய முயற்சிக் கிறார். எதிர்ப்பு தெரிவிப்ப தால் அமைதியாகிறார். ஒருநாள் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு மரியத்தை சீரிழத்து கொன்று வேலை யாட்கள் உதவியுடன் தோட் டத்தில் புதைக்கிறார். மரியம் ஆவியாக வந்து தன்னை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது கிளைமாக்ஸ்.
செல்வராகவன் படம் என்றதும் பெரிய எதிர்பார்ப் டன் படம் தொடங்குகிறது. காட்சிகளும் அதற்கேற்ப நகர்கின்றன. தொழில் அதிபர் ராம்சே என்ற வேடத்தில் பலவித நடிப்பை வெளிப் படுத்தி வெளுத்து கட்டி இருக்கிறார். அதிகமாக சிவாஜியின் நடை, வசன உச்சரிப்பு பணியை வெளிப் படுத்தி இருக்கிறார். டிப் டாப் உடையில் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருவது அவர் அணிந்திருக்கும் ஷுவை மேலாளர் நல்லா இருக்கு என்று சொல்லும் போது ’நல்லா இருக்கா 80 ஆயிரம் ரூபாய்’ என்று பெருமைபட்டுக் கொள்வது என்று ஏதோ ஒரு புது கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நுழைந் திருக்கிறார் என்ற ஆரவம் ஏற்படுகிறது.
சீன்கள் நகர நகர எஸ்.ஜே. சூர்யா தனது சிலிமிஷங்களை தொடங்கி விடுகிறார். ஏற்கன வே இதுபோன்ற சிலுமிஷங்க ளுக்கு இயக்குனர் செல்வராக வனும் சளைத்தவர் இல்லை என்பதால் இருவரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.
மரியம் என்ற பாத்திரத்தில் ஆசிரமப் பெண் கோலத்தி லேயே முதல் சீன் தொடங்கி கடைசி சீன் வரை வந்து செல் கிறார் ரெஜினா. சற்று வித்தியா சமான நடிப்பையும் வெளிப்ப டுத்த தவறவில்லை.


எஸ்.ஜேசூர்யா தன்னை தொட்டு பேசி சிலுமிஷம் செய்யும்போதெல்லாம் உர்ர் காட்டுகிறார். நந்திதா ஸ்வேதா விடம் எஸ்.ஜே.சூர்யாவின் சேட்டையை புகார் சொல்லும் போது கோபத்தில் பொங்கு கிறார். ஆனாலும் சூழல் அவரை அங்கிருந்து வெளி யேற முடியாதபடி செல்வ ராகவன் போட்ட திரைக்கதை முடிச்சு வலுவானது.
ரெஜினினாவை பலாத்காரம் செய்து புதைத்த பிறகு பேயாக வரும் அவரிடம் எஸ்.ஜே. சூர்யா சவால் விடுவது நம்பும் படி இல்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது.
எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ரெஜினாவுக்கும் நடக்கும் கடைசி மோதல் பரபர..
நந்திதா ஸ்வேதா பணக்கார தோரணையை லாவகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூர்யா வீட்டு வேலையாட் களாக வருவர்களையும் செல்வராகவன் சீன்களுக்கு மட்டுமல்லாமல் பாடல் காட்சிக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார், எனக்கு ஜூரம் பாடல் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது.
ஆவியாக இருக்கும் ரெஜினா சூர்யாவை தாக்க முடிய வில்லை ஆனால் தண்ணீரில் விழுந்த குழந்தையை எப்படி தூக்கி காப்பாற்றுகிறார் போன்ற சில கேள்விகள் எழுந்தாலும் அதிக பயமுறுத்தல் இல்லாத ஒரு பேய் படத்தை தந்திருக்கிறார் செல்வராகவன்.
யவுன் சங்கர் ராஜா இசையும் ஓவாராக பில்டப் இல்லாமல் அளவுடன் அமைத்திருக்கிறார்.

நெஞ்சம் மறப்பதில்லை – செல்வராகவன் ஸ்டைலில் ஒரு பேய் படம்.

Related posts

வீரமே வாகை சூடும் (பட விமர்சனம்)

Jai Chandran

Hukum World Tour Grand Finale

Jai Chandran

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு தினசரி நாளிதழ் சங்கம் வாழ்த்து..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend