தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் இன்று நடக்கும் என தேர்தல் அதிகாரி நீதியரசர் ஜெயசந்த்திரன் அறிவித்திருந்தார். அதன்படி
சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலைக்கல்லூரியில் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303. மொத்த முள்ள 27 பொறுப்புகளுக்கு112 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்
தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி, டி.ராஜேந்தர், பி.எல்.தேனப் பன் ஆகிய மூவரும் முதல் முறையாக தலைவர் பதவிக்கு போட்டி யிடுகின்றனர்.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர் களில் அணியின் சார்பில் போட்டியிடும் சிவசக்தி பாண்டியன்.
ஆர்.கே.சுரேஷ், பிடி.செல்வ குமார், முருகன் ஆகியோரும்
சுயேச்சையாக சிங்காரவடி வேலன், கதிரேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திர போஸ் இடையில் கணிக்க முடியாத போட்டியாக உள்ளது. பொருளார் பதவிக்கு அணியின் சார்பில் போட்டி யிடும் கே.ராஜன், சந்திரபிர காஷ் ஜெயின், ஜே.எஸ்.கே சதிஷ்க்குமான போட்டியிடு கின்றனர்.
மூன்று அணியினரும் தேர்தல் பணியில் தீவிரமாக இருந்து வெர்றி பெற்றால் என்னென்ன நணமைகள் சங்க உறுபினர்களுகு செய்வோம் என்பதை ஏற்கனவே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை23.11.2020 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க தேர்தலையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாலை 3 மணிவரை 942 ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. மாலை 4 மணிக்கு மொத்த ஒட்டுக்கள் 1050 பதிவானது. பிறகு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. நாளை ஒட்டு எண்ணிக்கை நடக்கிறது. மாலையில் புதிய நிர்வாகிகள் விவரம் தெரியவரும்.