கொரோனவும் கடந்து போகும்..
வீடியோவில் கதை சொன்ன பாக்யராஜ்..
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் கள் சங்க தலைவர் கே.பாக்யராஜ் இன்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் கொரோனாவை கண்டு பயப்படக்கூடாது. அதுவும் கடந்து போகும் என்றார்.
அவர் கூறியதாவது : அரசியல்வாதிகள். விஐபிக்கள். அரசுகள் என எல்லோருமே கொரோனா வைரஸ் பற்றி பேசி கை களை கழுவியும் இடைவெளி விட்டும் இருக்க வேண்டும் என திரும்ப திரும்ப சொல்வது நம் பாதுகாப்புக்காத்தான்.
நம் உறவினார்கள், நண்பர்கள், குடும்பத்தார் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் டாக்டர்கள், அரசாங்கம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அதேசமயம் கொரோனவை நோயை எண்ணி பயந்து விடக்கூடாது. 15 வருடங்களுக்கு முன்பு பாக்யாவில் ஒரு கதை எழுதிதேன். எவ்வளவு புகழ் பணம் வந்தாலும், அதல பாதாளத் துக்கே செல்லும் நிலை ஏற்பட்டாலும் அது எல்லாமே ஒரு நாள் நம்மை கடந்து போகும் என்பதுதான் அந்த கதையின் பொருள். கொரோனவும் அப்படித்தான் நம்மை கடந்துபோகும்.
எழுத்தாளர் சங்கம் சார்பில் தலா 50 ஆயிரம் நிவாரண நிதி பிரதமர், தமிழக முதல்வருக்கும் அனுப்பப்படு கிறது. பெப்சியில் எங்கள் சங்கம் உறுப்பினராக உள்ள தால் எங்கள் உறுப்பினர்களுக்கும் பெப்சி சார்பில் கொரோனாவு காலநிவாரண உதவி வழங்கப்பட்டது எங்கள் சங்கம் சார் பிலும் உறுப்பினர்களுக்கு தலா ரூ 1500 வழங்கப்படும்.
இவ்வாறு கே.பாக்யராஜ்
கூறினார்.
#Director Bhagyaraj telling Corona little story
#South indian writer’s Association
#கே. பாக்யராஜ் #கொரோனா குட்டி கதை
# தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்