..
இறப்பதற்கு முன் கொரோனா விழிப்புணர்வு..
சந்தனத்துடன் இணைந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா, வாலிப ராஜா படங்களில் நடித்தவர் சேது. இவர் அழகு சிகிச்சை டாக்டரும் ஆவார். நேற்று இரவு திடீர் மாரடைப்பில் காலமானார் சேது. நண்பரும் சக நடிகருமான சேது இருந்த மரண செய்தி அறிந்து சந்தானம் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் தனது டிவிட்டர் பக்கத் தில் இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில் ‘என்னுடைய உயிர் நண்பன் சேது இறந்தது பற்றி அறிந்து அதிர்ச்சியில் உறைந்து வவிட்டேன். மிகுந்த மன அழுத்தத்துக்குளாவிட்டேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுளார்.
இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வெளியிட்டிருந்தார் சேது. அதில் கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன முறைகளை கடைபிடிக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார். அந்த வீடியோ சேது வின் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
#SHOCKING AND DEPRESSING…-Actor SANTHANAM ON SETHU’S DEATH