: பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் உலகை ஏடாகூடமாக திருப்பி போட்டிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதன்படி, இந்தியாவில் அதன் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை களை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கடந்தவாரம் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி நேற்று மீண்டும் டிவியில் உரையாற்றினார். .
அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்று தடுக்க சமூக விலகல் கடைப்பிடிப்பதுதான் வழி என்று, வைரஸை கட்டுப்படுத்தியுள்ள நாடுகளைச் சோ்ந்த நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்ட இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா திணறி நிற்கின்றன.
நம் நாட்டையும், ஒவ்வொரு இந்தியரையும் காப்பதற்காக நள்ளிரவு (24ம் தேதி மார்ச் செவ்வாய்க்கிழமை ) மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு 21 நாள்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இது நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அவற்றிலுள்ள மாவட்டங்கள், கிராமங்கள், தெருக்கள் என ஊரடங்கு பொருந்தும்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறு வதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. அனைவரும் இத்தனை கடைபிடிக்க இருகரம் கூப்பிக் கவேண்டுகிறேன்.
இந்த 3 வார காலத்தில் மக்கள் தங்களது வீட்டின் ‘லக்ஷ்மண ரேகை’யைக் கடந்து வெளியில் வரவேண்டாம். இது பிரதமா் முதல் கிராமத்தில் இருக்கும் குடிமகன் வரை அனைவருக்கும் பொருந்தும்.
நாட்டில் கொரோனா வைரஸ் சிகிச்சை வசதிகள, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள், செயற்கை சுவாசக் கருவிகள் இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுகாதார அடிப்படைக் கட்டமைப் புகளுக்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக கடந்த 19-ஆம் தேதி மக்களுக்கு பிரதமா் மோடி மாா்ச் 22-ஆம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்தினாா் என்பது குறிப்பிபடத்தக்கது
#Corona Vairus: PM Modi’s lockdown speech