Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

5 வருடத்துக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்

விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். ரஜினிகாந்தின் சொந்தப்படமான பாபாவிலேயே வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிச்சென்றது.தில் படம்போலவே விஜய் நடித்த கில்லி படத்திலும் விஜய் தந்தையாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த ஆஷிஷ் நடிப்பு பாராட்டப்படது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ல் தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களை தவிர்த்துவிட்டார்.

இந்தநிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த ‘எக்கோ’வில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவவை கோபிநாத்  ஏற்கிறார். இசை: ஜான் பீட்டர். எடிட்டிங்: சுதர்ஷன். கலை மைக்கேல் ராஜ். நடனம் ராதிகா. சண்டை பயிற்சி டேஞ்சர் மணி.
தயாரிப்பு நிர்வாகம் பி.எம்.சுந்தர். மக்கள் தொடர்பு கே எஸ் கே செல்வா. ஒப்பனை ராமச்சந்திரன். ஆடை வடிவமைப்பு பாரதி. பாடல்கள்  ஏக்நாத்.

Related posts

விருகம்பாக்கத்தில் கவிஞர் சினேகன் வேட்பு மனு தாக்கல்

Jai Chandran

ராஜ்குமார்- ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்

Jai Chandran

director Jerry’s Mother Passed away

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend