Trending Cinemas Now
Uncategorized

முன்னாள் ராணுவ வீராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி படம்  எக்ஸ் ஆர்மி

5 மொழிகளில் தயாராகிறது

சாய் பிரபா மீனா இயக்குகிறார்

 

A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எக்ஸ் ஆர்மி”.

இதில் ஜெய் ஆகாஷ் எக்ஸ மிலிட்டரி ஆபிசராக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா,  அக்ஷயா. நடிக்கின்றனர். பிரதான வில்லனாக  தினேஷ் மேட்னே நடிக்கிறார். இவர்களுடன் மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை சாய் பிரபா மீனா  இயக்குகிறார். இவர் ஜெய்  ஆகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான யோக்கியன் படத்தை இயக்கியவர். ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில் சாய் பிரபா மீனா உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஆர்.ராம்குமார், சி. பி. சதீஷ் குமார் இணைந்து வழங்கும் இப்படத்தை   ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ரூட் என்ற  படத்தை இயக்கி  ஒளிப்பதிவு செய்தவர். ஜெய் விஜயம் படத் துக்கு இசை அமைத்த எஸ்.சதீஷ் குமார் இசை அமைக்கிறார். துர்காஸ் எடிட்டிங்  செய்கிறார். புதுமையான  ஸ்டன்ட் காட்சிகளை விஜய் ஜாகுவார் அமைக்கிறார். ஜோய் மதி நடனம் அமைக்கிறார்.  பி ஆர் ஒ   வேலு.

ராணுவத்தில் பணிபுரிந்து போரில் வீர காயத்துடன் ஓயுவு பெறும்  இராணுவ  வீரர் ஜெய் ஆகாஷ் நாட்டில் சிலர் பெண்களுக்கு எதிராக நடத்தும் வன்முறைகள், பாலியல்  துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார். அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை  ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து ஜெய் ஆகாஷ் எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக்ஷ்ன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.

எல்லையை காப்பற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான்  படத்தின்  மையக் கரு.

இப்படத்தின் தொடக்க விழா பாடல் பதிவுடன்  இன்று ஆகஸ்ட் 11. தேதி நடந்தது. இதில் ஹீரோ ஜெய் ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு,.மலையாளம்,.கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது.  விரைவில் படப்பிடிப்பு தொடங்கி  சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது.   இந்த ஆண்டு இறுதியில் இப்பபடம் திரைக்கு. . வருகிறது.

 

 

Related posts

மோகன்லால் – ஷனாயா கபூர் மும்பையில் 2ம் கட்டபடப்பிடிப்பு

Jai Chandran

Jai Chandran

அமீரின் உயிர் தமிழுக்கு படம் வெளியிடும் சுரேஷ் காமாட்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend