Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் ரிலீஸ் ஆகாமலிருந்து. ஊரடங்கு தளர்வில் தியேட்டர் கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீதம் மட்டுமே டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டது.  100 சதவீதம் அனுமதி கேட்டு தியேட்டர் அதிபர்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்தனர்  நடிகர் விஜய் நேரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 100 சதவீதம் டிக்கெட் அனுமதி கேட்டார். அது குறித்து முதல்வர் பரிசீலித்து முடிவு அறிவிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

இந்நிலையில் ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி,  மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Related posts

PT Usha elected as the first Woman President

Jai Chandran

An Associate of Director Pa. Ranjith debuts

Jai Chandran

Arulnithi ‘s Dejavu teaser hits 1M+ views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend