10ம் வகுப்பு தேர்வு தேதி திடீர் மாற்றம்
அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டை யன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப் பதால் மாணவர்களின் நலனை அரசு கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்படு கிறது.
அதன்படி ஜூன் 15-ம்தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் காலையில் நடக்கும். தேர்வின் போது ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுத தேர்வு எழுத அனுமதிக் கப்படுவார்கள். விடுபட்ட 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16ம் தேதியும் பிஸஸ்2வுக்கு விடுபட்ட எஞ்சிய தேர்வு ஜூன் 18-ந்தேதி நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னதாக அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்வு தேதியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோரோனா தொற்று பரவல் தற்போது தேர்வை தள்ளிபோட வைத்திருக்கிறது,
#TN SSLC Exam 2020: TN 10th Public Exam dates postponed,