Trending Cinemas Now
அரசியல் செய்திகள்

வங்கி கடன் இ எம்ஐ செலுத்த 3  மாதங்கள் அவகாசம்..

ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

மும்பை மார்ச் :
கொரோனா பாதிப்பு காரண மாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் வங்கியில் கடன் தவணைகள் (இ எம் ஐ ) வசூலிக்க 3 மாதங்கள் அவகாசம் அளித்து உத்தர விட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப் படுகிறது.  இதனால்  ஐடி அலுவலகங்கள் , தொழிற் சாலைகள் தொடங்கி 90 சதவீத கடைகளும் மூடி வைக்கப்பட் டிருக்கின்றன. இதனால் வெகுஜன மக்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டிருக் கிறது. வங்கிகளில் வாங்கிய கடனுக்கு தவணை தொகை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆலோசனை செய்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.  வங்கிக் கடன் தவணை நிலுவைகளுக்கு 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என அவர் அறிவித்திருக்கிறார். மேலும் தவணை செலுத்த 3 மாத அவகாச காலத்தை  வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரிலும், அதனை வாராக்கடனாகவும் சேர்த்து விடக் கூடாது  என வங்கி களுக்கு சக்தி காந்ததாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

#RBI  #Shaktikanta Das

#Banks free to defer payment of EMIs by 3 months! RBI gives huge loan relief

Related posts

இயக்குனர் சுந்தர். சி தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் 3 ஹீரோக்கள்

Jai Chandran

தினகரன் தலைமையிலான அமமுக முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

Jai Chandran

60 பேர்களுடன் நாளை முதல் டிவி படப்பிடிப்பு தொடங்க அனுமதி.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend