Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள்: சரத்குமார் அறிக்கை

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நி றுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை

தமிழ்நாடு அரசின் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று தாக்கல் செய்திருப் பதில், வரவேற்கத்தக்க வளர்ச்சி திட்ட அம்சங்கள் அமைந்திருப்பது மகிழ்வளிக்கிறது.

மக்கள் பெரிதும் எதிர்பார்த்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ”மகளிர் உரிமை தொகை” திட்ட அறிவிப்பும், பத்திரப்பதிவுக் கட்டணம் 4% இருந்து 2%ஆக குறைத்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

சேலத்தில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம், கோவையிலும், தென்னக வளர்ச்சிக்கு அடித்தளமாக மதுரையிலும் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், 400 கோவில்களில் குடமுழுக்கு விழா, பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு என பல்வேறு வரவேற்கத்தக்க சாராம்சங்களுடன் கூடிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழ்நாட்டி சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம் அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்திட வேண்டும் என்றும், அதனை முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தேன். அதன்படி, தற்போது அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி யிருப்பது மகிழ்வளிக் கிறது.

கொரோனாவில் இருந்து மீண்டெழும் பொருளா தாரத்தால் தமிழக அரசின் வரவினங்கள் 2022-23 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில் அதிகரித்திருப்பதும், வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரம் கோடியில் இருந்து 30 ஆயிரம் கோடியாக குறைந்திருப்பதும் மகிழ்வளித்தாலும், கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்து கிறது.

மேலும், அன்றாட வாழ்வில் எளிய மக்கள் தங்கள் வாழ்வாதார தேவையை பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு அத்தியாவ சியப் பொருட்களின் விலையேற்றம் தினந் தோறும் அதிகரிக்கிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது. மது மற்றும் போதையால் தமிழ்நாட்டில் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். படிப்படியாக மதுவிற்பனை குறைப்பதற்காகவோ அல்லது மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு களோ பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்ற மளிக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு எளிய மக்களின் நலனுக்காக விலைவாசி யை கட்டுப்படுத்தவும், கவர்ச்சிகர இலவச, மானிய திட்டங்களை கைவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை செயல் படுத்த வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்

இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

If Zootopia Were Made in Kollywood..

Jai Chandran

கோவையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி

Jai Chandran

Song from “FIR”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend