Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தியேட்டர் அதிபர்கள் அதிரடி முடிவு…

தியேட்டர் அதிபர்கள் அதிரடி முடிவு..

ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர் திறப்பு இல்லை..

திரையுலகில் தொழில் நுட்பம் வளர வளர பிரச்னையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திருட்டு விசிடிக்கள் திரையுலகை பாடாய்படுத்தி யது. தற்போது ஒடிடி எனப்படும் இணைதள வழியாக படங்கள் ரிலீஸ் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித் துள்ள ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படம் நேர்டியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செய லாளர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல் அந்த பட நிறுவனமோ அது சம்பந் தப்பட்ட நிறுவனங்களின் படத்தையோ தியேட்டர் களில் வெளியிடமாட்டோம்’ என கூறினார்.
அதேபோல் திரையரங்கு உரிமையாளர்கள் பிரதிநிதி திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள வாட்ஸ் ஆப் ஆடியோவில் கூறியிருப்பதாவது:
திரை அரங்குகளில் படங்களை வெளியிடாமல் ஒடிடி தளத்தில் படங்களை வெளியிடுவது எங்கள் உரிமை என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். அதுபோல் எந்த படத்தை எங்கள் தியேட்டரில் வெளியிட வேண்டும் என்பது தியேட்டர் காரர்களின் உரிமை. பன்னீர் செல்வம் வெளியிட்ட கருத்து சங்கத்தின் கருத்து.
இப்போதெல்லாம் ஹீரோக்கள் வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிக்கிறார்கள். 100 கோடி சம்பளம் வாங்குகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தான் கால்ஷீட்டும் தருகிறார்கள். தியேட்டர்கள் எண்ணிக்கை ஆயிரமாக குறைந்துவிட்டது. ஒடிடி தளத்தில் படத்தை வாங்கிறார்கள் விற்கிறோம் என்கிறார்கள். அவர்கள் சிறிய படத்தை வாங்கு கிறார்களா. பாபுளர் நடிகை நடித்த படத்தைத் தான் வாங்கியிருக்கிறார்கள். தியேட்டரில் படங்களை போட்டதால்தான் அந்த நடிகருக்கோ, நடிகைக்கோ பாபுளரிட்டி கிடைத்தது என்பதை மறக்ககூடாது.
கொரோனா தடைக் காலம் முடிந்ததும் அனைத்து தியேட்டர்காரர்களின் கூட்டம் நடத்தப்படும். லைசென்ஸ் புதுபித்தல் 3 வருடம் ஆக்க வேண்டும். மாநில அரசின் வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து அதனை பெறுவோம். புதிய படங்கள் சினிமா தியேட்டரில் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி தளத்தில் திரையிட வேண்டும் என்ற உறுதியை கட்டாயமாக பெறும்வரை தியேட்டர்களை திறக்கப்போவதில்லை’ என திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்.
#Tamilnadu theatre owners plan total shutdown after covid 19 lockdown
#thriupoorsupramaniyam #jothikha #rajinikhanth #annaamalai #ponmakalvanthaal #jothikha

Related posts

2Million + for MurungakkaiChips

Jai Chandran

ஆயிரம் பொற்காசுகள்: ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட்.இலவசம்

Jai Chandran

Naga Chaitanya, Chandoo Mondeti, Bunny Vas Meet Fishermen Families

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend