Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

முதல்வருக்கு செல்வமணி நன்றி.

முதல்வருக்கு செல்வமணி நன்றி..

கொரோனா ஊரடங்கால் தமிழ்திரைப்பட துறையில் பணிகள் நிறுத்தப்பட் டுள்ளது மே 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி தமிழக அரசு  அளித்துள்ளது. இதுகுறித்து பெப்சி (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) தலைவர் ஆர்கே செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
போஸ்ட்புரொடக்ஷ்ன் பணிகள் மேற்கொள்ளும் போது தயாரிப்பாளர் களுக்கும், தொழிலாளர் களுக்கும். தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அரசு விடுத்துள்ள நிபந்தனை களை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும். மேலும் முக கவசம், கையுறை, பணிபுரியும் இடங் களில் கிருமிநாசினி பயன் படுத்துதல் தெரியாத நபர் களை அனுமதிக்காமல் இருத்தல் ஆகியவற்றை கடைபிடிக்கு மாறு தயாரிப் பாளர்களையும் தொழிலா ளர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 யாராவது ஒருவர் தவறு செய்து  தொற்று ஏற்படும் அபாயம் அமைந்தால் இந்த அனுமதி ரத்து செய்யப்படக் கூடிய சூழல் அமையும் என்பதை அனைவரும் நன்கு உணர்ந்து தமிழக அரசு விடுத்துள்ள விதிமுறை களை கண்டிப்பாக நிறை வேற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் எங்கள் கோரிக்கை யை ஏற்று தமிழ் திரைப்படத் துறைக்கும் சின்னத் திரைக்கு அனுமதி வழங்கி யுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோ ருக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித் துக் கொள்கிறோம் இவ்வாறு ஆர்கே செல்வ மணி அறிக்கையில் கூறி உள்ளார்.
#Thanks Note To Tamilnadu Chief Minister From RK.selvamani  #FEFSI
#ஆர்.கே.செல்வமணி #பெப்சி

Related posts

Yash19 as Toxic – A Fairy Tale for Grown-ups

Jai Chandran

vijayantony ‘s KodiyilOruvan trailer crosses 2.5 Million views

Jai Chandran

POWER Song From Suriya-Starrer JAI BHIM is out!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend