கள்ளழகர் திருவிழா ரத்து..
கோவில் நிர்வாகம் அறிவிப்பு..
மதுரை, ஏப் :
உலக நாடுகளின் நாகரீக த்தையே கொரோனா வைரஸ் தலைகீழாக திருப்பிபோட்டுள்ளது. மத ரீதியான பண்டிகைகளும் ரத்து செய்யப்பட்டிருக் கின்றன.
உலக அளவில் புகழ்பெற்றது மதுரையில் ஆண்டுதோறும் சித்திரையில் நடக்கும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா. பல லட்சம் மக்கள் இதற்காக திரள்வார்கள். கொரோனா தொற்று காலத்தில் இப்படியொரு கூட்டம் கூடுவதற்கு தடை உள்ளது. இதனால் கள்ள ழகர் ரத்தாகும் என்று கூறப் பட்டுவந்தது. வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் வரும் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் நடை பெறுவதாக இருந்தது. ஆனால் கள்ளழகர் திரு விழா, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டி ருக்கிறது. மண்டூக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி, புராணம் வாசித் தல் நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள் ளது.
#kallazhagar festivel cancel
#madurai festivel