மேடை நடன கலைஞர்கள் பசியை போக்குங்கள்..
முதல்வருக்குமன்சூர் கோரிக்கை..
நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூர் அலிகான் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறி உள்ளதாவது :
கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும்.
தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான மேடை நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். தற்போதைய ஊரடங்கி னால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கே வழியின்று தவித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் அல்லாமல், மேடை நாடக நடிகர்கள், சினிமா துணை நடிகர்கள் உள்ளிட்ட சினிமா துறையில் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு பொது மக்களுக்கும் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள்போல, மேடை நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கும் வழங்க வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மன்சூர் அலிகான் கூறி உள்ளார்.
#Mansoor alikhan request TM Chief Minister
#helpstagedancers
#மன்சூர் அலிகான்