71வது குடியரசு தினம் இன்று கொண்ட்டடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். குடியரசு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி இந்திய அரசியல மைப்பு சட்டத்தின் நகலை அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி வெளியிட்டுள்ள மெசேஜில்.’அரசியலமைப்புச் சட்டம் விரைவில் உங்க்ளுக்கு வந்து சேரும் . நாட்டைப் பிரிப்பதில் இருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, தயவுகூர்ந்து இதைப் படியுங்கள்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இப்படியொரு யுக்தியை காங்கிரஸ் கையாண்டுள்ளது.
#Congress sends PM a copy of Constitution